வாசகனின் குறிப்புகள்
குறிப்பு - 01
##
பிரேத பரிசோதனை #காணாத கவிதைகள் - எஸ்.பி பாலமுருகனின் நட்சத்திரங்கள் நனைந்து போன மழை நாட்கள் -
ஒரு வாசக குறிப்பு
#
எஸ்.சிவசேகரன்
#
"பொதுவாக எழுத்து என்பது வாழ்வின் சமரசப் போக்கை, இருண்ட பக்கங்களை,அதன் சிக்கலான தன்மைகளை வாசகனுக்கு கொண்டு செல்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" மேற்படி நண்பர் பிரோஸ்கானின் முன்னுரை வாசகம்தான் என்னை இந்த குறிப்பை எழுத வைத்தது.
எஸ்பி.பாலமுருகன், மலையகத்தைச் சேர்ந்த இயங்குநிலை கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை மூன்று பிரதிகளை வெளியிட்டுள்ளார் என்பதை அவரைப் பற்றிய அறிமுக குறிப்பின் மூலமாக அறியமுடிகிறது. அவர் தன் உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.;
"கவிதை இலக்கியம் அரசியலாகிவிட்டது அவர்களுக்கு ஒரு கூட்டம்; ஒரு கொள்கை; ஏகாதிபத்தியங்கள்; சிலர் சிலரை மட்டுமே வளர விடுவது; சிலர் வளர்வதை தடுப்பது; சிலரின் கவிதைகளை ஆட்சியில் அமர்த்த செய்யப்படும் சூழ்ச்சிகள்; மற்றவர்களின் கவிதை மீது காணும் விமர்சனங்கள் எல்லாவற்றையும் பார்த்து விலகி நடக்கிறேன் "
தனது கருத்தை போலவே பாலமுருகன் எல்லாவிதமான கவிதை பற்றிய கட்டுப்பாடுகளையும் மீறி எளிமையான முறையில் கவிதைகளை எழுதியுள்ளார். இலகுவான சொற்கள் மூலமாக, இலகுவான கோர்வையில் தனக்கே உரிய பாணியில் கவிதைகளைப் படைத்துள்ளார். பாலமுருகனின் பலம் அவருடைய கவிதைகள் வாசகனுக்குள் புகுத்தும் கேள்விகள்; இறுதி திருப்பங்கள்.
"வெட்டப்பட்ட குழிகளில்
எல்லாம் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது நமக்காக வெட்டப்பட்ட குழிகள் என்று தெரிந்தும்
தெரியாதது போல
எப்போதாவது தடுக்கி விழலாம்"
என்கிற வரிகள் எங்கள் அறியாமைகளுக்கான சாட்டை..
" கடைசியில்
புரியாது புரிகிறது
ஊமைகளின் வாய்களுக்கு
பூட்டுகள் இடப்பட்டுள்ளது பற்றி"
இது சொல்லும் மாயம் இன்னொரு வகை.
மேலும் #தலைப்புகளால் கவிதை சொல்லும் வித்தை இவருக்கும் தெரிந்திருக்கிறது.
பலவீனம் சில கவிதைகள் "முடிந்தது" என்று தோன்றும் போது மீண்டும் தொடர்வது. சிலகவிதைகள் இழுத்து நீண்டப்பட்டுள்ள உணர்வுகள் தலைகாட்டுகிறது.
எழுத்துப்பிழைகளைகள் ஆங்காங்கே தலைகாட்டினாலும் எளிமயான சொற்களாலான கவிதைகள் என்பதால் கருத்துச்சிதைவுகள் நிகழும் வாய்ப்பு குறைவாகிறது.
ஆகமொத்தம் நான் சொன்னது போல பிரேத பரிசோதனை #காணாத நல்ல கவிதைகள் கொண்டமைந்த தொகுப்பாக இது அமைந்திருக்கிறது..

கருத்துகள்
கருத்துரையிடுக