என்ர கத - 10
எஸ்.சிவசேகரன்
#
அதிசயம்
#
இந்த உலகத்திலயே ஆகச்சிறந்த- நிகரில்லா அதிசயம் என்ன தெரியுமோ? எண்டு என்னை கேட்டால்; நானும் சொல்லுற பதில் "அம்மா" தான். உங்கட அம்மாவப்போல என்ர அம்மாவும் ஒரு அதிசயம். அந்த அதிசயத்துக்கு இப்ப வயது சரியா 70.
நீங்கள் நினக்கலாம் எல்லா அம்மாவும் அதிசயம் தான, இவரென்ன பெரிசா புழுகுறார் எண்டு. தொடந்து படியுங்கோ..
நான் முதலொரு கதையில சொன்னமாதிரி, உயிலடி - கோவியப் பரம்பரையின்ர மூத்த வாரிசு என்ர அம்மா. இப்பவும் எங்கட அம்மய்யாக்கள் உருவாக்கின வைரவர்கோவில்ல நடக்கிற "மடை"ப்பொங்கலுக்கு அம்மாவுக்கு சேதி வந்திடும் எப்ப மடை எண்டு.. என்ன வேலை கிடந்தாலும் தூக்கிப்போட்டுட்டு போய்டுவா கோவிலுக்கு. ஊருக்கு போறதெண்டா அம்மாவுக்கு அப்பிடி ஒரு
சந்தோசம். அய்யாவோட இருக்கேக்க அம்மா சொந்தபந்தமோ, கோவிலோ, டவுணுக்கோ எங்கயும் பெரிசா போகல. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா எண்ட மாதிரித்தான் அம்மாக்கு வெளி உலகப்பிரவேசம் இருந்தது.
இப்ப, 70 வயதிலயும் 25 கி.மீட்டர் தள்ளி நிக்கிற மூத்தக்காவீட்ட கிழமைக்கு 2 தரம் போய் வருவா. அப்பிடி ஒரு மிடுக்கான ஆள் எங்கட அம்மா.
அம்மா கட்டினது தொடங்கி 2000ம் ஆண்டு மட்டும் மீன் யாவாரம் (வியாபாரம்) செய்தவா. பளை, எழுதுமட்டுவாள், கொடிகாமம் எண்டு எல்லா இடமும் அலைஞ்சு மீன் வித்த அம்மா பட்ட அவஸ்தைகள் இன்னும் ஏராளம்.
அம்மாவ "அதிசயம்" எண்டு சொன்னதுக்கு முக்கிய காரணம் ஒண்டில்ல ஏராளம்.
கலியாணம் கட்டினகாலம் தொடங்கி அடிகளும், வசையளும் வாங்கியிருந்தாலும் அய்யாவ ஒரிடத்தயும் விட்டுக்கொடுக்கிறதில்ல அம்மா. நாங்கள் அய்யா கூடாதெண்டு சொன்னால் தாறுமாறா கிழி விழும். கலியாணமாகி கொஞ்ச நாளிலயே, அய்யா ஏற்கனவே கலியாணம் செய்து ஒரு பிள்ளையெண்டு தெரிஞ்ச பிறகும் அம்மா ஒரு வார்த்தை அய்யாவ கேக்கலயாம்.
5 வரியமா பிள்ளை பிறக்காததால அய்யா மலடி எண்டு பட்டம் குடுத்தும் அம்மா ஒண்டும் கதைக்க இல்ல. அண்ணன் பிறந்த பிறகும் அய்யான்ர அடி ஆய்க்கினைய எதிர்த்து ஒண்டும் கதைக்க இல்ல. இதையெல்லாம் விட கொடுமயான விசயம் என்னெண்டா, அம்மய்யா செத்தவீட்டுக்கு கூட அய்யா தனக்கு சமச்சு வச்சிட்டு போகச்சொன்னவராம். அம்மா அழுதழுது சமச்சுப்போட்டு செத்தவீடு போக, அம்மய்யாவ சுடலைக்கு கொண்டு போய்ட்டினமாம். இதுக்கு பிறகும் அம்மா வந்து ஒண்டும் கதைக்கயில்லயாம். இந்தக்கால பொண்ணுகளெண்டால் என்ன ஆகியிருக்குமெண்டு நான் சொல்லத்தேவயில்ல.
அம்மா இப்பவும் அய்யாவில மரியாதை குறய இல்ல. 2015க்கு பிறகும் வரியாவரியம் (வருடம்) அய்யான்ர திதிக்கு அக்காக்கள் அண்ணாக்களுக்கு ஒரு கிழமைக்கு முதல் சொல்லிப்போடுவா
"கொய்யாக்கு துவசம் வருகுது;எல்லாரும் வந்திடுங்கோ"
அதுக்கு மறுபேச்சில்ல, அஞ்சு பிள்ளயளும், மருமக்கள் பேரப்பிள்ளையள் எல்லாரும் ஒண்டா வந்திடுவினம் வீட்ட. அம்மா தானே எல்லாத்தயும் பாத்துபாத்து சமச்சு அய்யாக்கு படைப்பா.
இப்பிடியான அம்மாவ உலகத்திலயே அதிசயம் எண்டு சொல்லுறதில என்ன தப்பு சொலுங்க?
19.04.2020

கருத்துகள்
கருத்துரையிடுக