என்ர கத - 08
எஸ்.சிவசேகரன்
#
வீராப்பு
#
அய்யா எட்டாம் வகுப்பே படிச்சிருந்தாலும் ஆளுக்கு உலக - நுண் அறிவு கூட. அந்தக்காலத்து ஆக்கள் எல்லாருக்கும் இந்த ரெண்டு அறிவும்தான இருந்தது; யார் கம்பசும் கொலிச்சும் படிச்சவயள்..?
ஊரில நடக்கிற எந்தக்கூட்டத்திலயும் (பள்ளிக்கூடம், கோயில், கடற்தொழில் சங்கம்) முதல்ல எழும்பி சட்டம் கதைக்கிறது தொடங்கி, அதிபர்,விதானை மேல புட்டிசன் எழுதிறது வரைக்கும் அய்யா கெட்டிக்காரர். அதோட வில்லத்தனத்தோட கூடின வீராப்பும் தான்.
அய்யான்ர சட்ட- சண்டித்தனங்களால ஊருக்குள்ள அதிகமா எல்லாரும் பகைதான். அதனாலயோ என்னவோ இரவு கடலுக்கும், பகல் வெளியிலயும் போகும்போது அய்யான்ர இடுப்பில இரு "கிறிஸ் கத்தி" ஒழிச்சிருக்கும். ஒருக்கா, யாரோ "விசயன்" எண்டுறவர் கடற்கரையில வச்சு "வேசை மோன்" எண்டு பேசினதுக்கு இடுப்பில செருகிவச்சிருந்த கத்தியால குத்திப்போட்டு வீட்டவந்து, குசினிக்குள்ள அம்மாக்கு முன்னால கத்திய எறிஞ்சுபோட்டு வல்வெட்டித்துறைக்கு ஓடிட்டாராம். இப்பிடியான மனுசன்
காலம் செல்லச்செல்ல அம்மாவையுன் அவயின்ர சொந்தங்களோட பழகாமல் மறிச்சுப்போட்டார்.
இருந்தும் சிலவேளை அய்யா பருத்தித்துறைக்கோ, வல்வெட்டித்துறைக்கோ போன நாளிலதானாம் அம்மா வெளியாக்களோட கதைப்பா. மற்றப்படி அம்மா வளவுக்குள்ளதான். ஒருவேளை தான் இல்லாத நேரத்தில அம்மா அவயின்ர சொந்தங்கள் வீட்ட போனது தெரிஞ்சா, அம்மாக்கு நல்ல அடிவிழுமாம். இந்த அடி ஆய்க்கினைகள் என்ர 8 வயது வரையும்; அம்மாவ வசையள் சொல்லுறது அவர் சாகுவரையும் இருந்தது. அம்மாவோட சேர்த்து நாங்கள் எல்லாரும் அய்யாட்ட வாங்கின அடியளின்ர கதய கேட்டால் கண்ணீர் வரும்.
இப்படியான- சாகும்வரைக்கும் வீராப்பயும் சண்டித்தனத்தையும் விடாத அய்யா, கொஞ்சம் பணிஞ்சு நடந்ததும்- அறிவுரை கேட்டதும் ஒராளிட்டத்தான்.
அவர் ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்
00
17.04.2020
06.00am

கருத்துகள்
கருத்துரையிடுக