கவிதை -இயேசுவை கொன்றவர்கள்


இயேசுவை கொன்றவர்கள்
#
#

பிதா
சுதன்
பரிசுத்த ஆவியின் பெயரால்
இந்த வாக்குமூலத்தை வழங்குகிறேன்

எல்லாம் வல்லவராகிய கடவுளே
இந்த சீவனின் நாவில்
சத்தியத்தை இருத்துவீராக..!

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவர் எனக்காகவும் மண்ணில் பிறந்தவர்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவர் எனக்கும் சேர்த்து சிலுவை சுமந்தவர்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவர் எனக்கும் சேர்த்து இரத்தம் சிந்தியவர்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவர் எந்த மதத்தையும் சாராதவர்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
என்னை அவரும்
வழிநடத்திக்கொண்டிருக்கிறார்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவரும் எனக்கு
நேசிக்க கற்றுக்கொடுத்தவர்

நான் இயேசுவை நேசிக்கிறேன்
அவர் எனக்காகவும் உயிர்த்தெழுந்தவர்

தான் வளர்த்த நேசங்களின் வேண்டுதலில்
உயிர்த்தெழுந்த இயேசுவை
ஒவ்வொரு பாகங்களாய் அறுத்து
துடிக்கத் துடிக்க கொன்றவர்கள்
புனிதச்சிலுவைகளை கைகளுக்குள் இறுக்கியபடியே
அதோ வருகிறார்கள்
என் நாவை அறுக்க...

நான் இறுதியாக
சொல்லிக்கொள்கிறேன்

நான் இயேசுவை நேசிக்கிறேன்..
அவர் எல்லோர் பாவங்களையும் மன்னித்தருள்பவர்

பிதா
சுதன்
பரிசுத்த ஆவியின் பெயாரால்

ஆ..மே..ன்

00
எஸ்.சிவசேகரன்
10.40am
12.04.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்