இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

❣️ எனக்கொரு பார்ட்னர் தேவை ❣️

படம்
 (Not a joke; it's a open talk 😊) 01- பிறந்த நாளுக்கு (17.05) வாழ்த்திய அன்பர்களில் (என்னை நெருக்கமாக அறிந்தவர்கள்) பாதிப்பேர்; >திருமணம் எப்போது? >ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? >சீக்கிரமா நேர காலத்தில பண்ணிக்கொள்.  >எப்பவும் தனிமையிலே இருக்காதே!  அம்மா பாவம்; அவவுக்காக பண்ணிக்கொள். >30 தாண்டியாகி விட்டது; இன்னும் என்னடா செய்யிறாய்? >பல காதலிகள் இருந்தார்களாம்; அதில் ஒன்றை கட்டித் தொலைத்திருக்கலாம்" > பாதியை கடந்து விட்டாய்; மீதிப் பாதியை கடந்து விட உனக்கொரு பார்ட்னர் தேவை. >பேஸ் புக் ல சும்மா எழுதிக்கொண்டு இருக்காத; வாழ்க்கைய அனுபவி என்றெல்லாம் அக்கறையோடும்; செல்ல கோபமும் கொண்டு பேசினார்கள்.  அவர்கள் எல்லோரின் வார்த்தைகளும் உயிர்ப்பான வார்த்தைகள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொண்ட பதில்களின் "சாரம்" ஒன்றுதான். அது "என் இருப்பு நிலை; நான் கொண்ட வாழ்வுச் சித்தாந்தம். 00 02- காதல் என்னிடம் அப்படியேதான் இருக்கிறது. காதலிகள் இப்போது இல்லை. என் அதிகப் பிரசங்கங்கள் அவர்களிடமிருந்து என்னை தள்ளி வைத்துவிட்டது. இங்குதான் நான் கூறிய "என் இரு...

இலக்கியமும் அதிகாரமும் - சிவசேகரன்

படம்
01- அண்மையில் கவிஞர் சித்தாந்தன் பகிர்ந்து கொண்ட கருத்தில் இலக்கிய வடிவம் பற்றியும் இலக்கியத்தை (தரத்தை) தீர்மானிக்கும் அதிகார மையங்கள் பற்றிய தன் கருத்துகளை அங்கே சுட்டி காட்டி இருந்தார். இலக்கிய வடிவம் இங்கு பிரச்சினை இல்லை. வடிவம் ஒரு பிரதியின் தரத்தை அதற்கான பெறுமானத்தை தராது என்பது ஏற்புடையது. அது அது (கவிதை,சிறுகதை,நாவல்) தனக்கான பல்வேறு வடிவங்களை உருவாக்கி முன் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. சித்தாந்தன் குறிப்பிடும் இலக்கிய தரத்தை தீர்மானிக்கும் அதிகார மையங்கள் என்ன? என்பதே கேள்வி. "எதைக் கொண்டாடுவது எதை நிராகரிப்பது என்ற அதிகார மையங்கள் இலக்கியப் பரப்பில் உருவாகத்தொடங்கிவிட்டன. இவை வலிந்து சில இலக்கியப் பிரதிகளை கொண்டாடுவதற்கான யுத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. இவை குழுநிலை சார்ந்து வலிந்த கருத்தேற்றங்களை செய்துவிடுவதோடு அவற்றை பொதுக் கருத்துநிலையாக மாற்றவும் முயல்கின்றன." - சித்தாந்தன் - சித்தாந்தன் கூறுவது போல அதிகார மையம் இன்றோ நேற்றோ தோன்றியது அல்ல. ஆதிமுதல் இலக்கியத்தை; அதன் தரத்தை தீர்மானித்த அதிகார மையங்கள் என்பது நான் குறிப்பிடும் அக்கடமிக்ஸ் என்ற கல்வ...

கலைந்து போன கனவு ராஜ்யம் – சிறுகதை - சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

படம்
“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் சொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது? பெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்...

விலாசமும் அந்நியமும் - கவிஞர் இ.த.ஜெயசீலன்

படம்
கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனது இரண்டாவது புதுக்கவிதை தொகுதியான ' அந்நியத்தின்  விலாசம் ' அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் எனக்கு வாழ்த்துரை  வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன் அவரின் முதலாவது புதுக்கவிதை  நூலான 'மட்டைவேலிக்கு தாவும் மனசு' மருதங்கேணி பிரதேச செயலக கலாச்சார விழாவில்  வெளியிடப்பட்டது. அந்நூல் வெளியீட்டில் முக்கியமான உரை ஒன்றை ஆற்றவும் எனக்கு வாய்ப்பு  கிடைத்தது. அன்றே  சிவசேகரனை ஈழக்கவிதை துறையில் தனித்துவமாக வளரும் கவிஞராக அடையாளப்படுத்தியிருந்தேன் . சிவசேகரன் இடைப்பட்ட காலத்தில் தனது அடுத்த படிநிலை வாசிப்பனுபவத்துடன் பல கவிதைகளை ஆக்கி குறும்பாக்கள் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டதோடு சமூக வலைத்தளம், ஊடகங்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக கவிதைகளையும ; கருத்துக்களையும்  விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றார். இவரின் பகிர்வுகள் பகிரப்பட்ட சந்தர்ப்பஙகளில்  பரவலான அறிமுகத்தை; விமர்சனங்களையும பெற்றிருந்தன. அவ்வாறு வெளிவந்த கவிதைகளிற்  சிலவற்றை தொகுத்து இவ் 'அந்நியத்தின் விலாசம்' ...