விலாசமும் அந்நியமும் - கவிஞர் இ.த.ஜெயசீலன்

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனது இரண்டாவது புதுக்கவிதை தொகுதியான 'அந்நியத்தின் விலாசம்' அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் எனக்கு வாழ்த்துரை வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன் அவரின் முதலாவது புதுக்கவிதை 
நூலான 'மட்டைவேலிக்கு தாவும் மனசு' மருதங்கேணி பிரதேச செயலக கலாச்சார விழாவில் வெளியிடப்பட்டது. அந்நூல் வெளியீட்டில் முக்கியமான உரை ஒன்றை ஆற்றவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்றே சிவசேகரனை ஈழக்கவிதை துறையில் தனித்துவமாக வளரும் கவிஞராக அடையாளப்படுத்தியிருந்தேன். சிவசேகரன் இடைப்பட்ட காலத்தில் தனது அடுத்த படிநிலை வாசிப்பனுபவத்துடன்
பல கவிதைகளை ஆக்கி குறும்பாக்கள் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டதோடு சமூகவலைத்தளம், ஊடகங்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக கவிதைகளையும ; கருத்துக்களையும் 
விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றார். இவரின் பகிர்வுகள் பகிரப்பட்ட சந்தர்ப்பஙகளில் 
பரவலான அறிமுகத்தை; விமர்சனங்களையும பெற்றிருந்தன. அவ்வாறு வெளிவந்த கவிதைகளிற் 
சிலவற்றை தொகுத்து இவ் 'அந்நியத்தின் விலாசம்' தொகுதியையும் தந்திருக்கின்றார்.

ஒரு இளைய படைப்பாளியாக ஓரளவு தொடர்ச்சியாக படைப்பு முயற்சிகளில் ஈடுபடும் சிவசேகரன் தற்போது ஈழத்தில் அனேகமாக எல்லா கலை இலக்கியப் படைப்பாளிகள் வாசகர்கள் 
மட்டங்களிலும் அறிமுகத்தை பெற்றிருக்கிறார். இக் குறுகிய காலத்தில் தனது படைப்பு முயற்சியைத் தாண்டி ஒரு இலக்கியச் செயற்பாட்டாளராகவும், இலக்கிய முயற்சிகளுக்கு தன் நெருக்கடி மிகுந்த வாழ்க்கைப் பயணத்தன் மத்தியிலும் சலிக்காது ஒத்துழைப்பவராகவும், பல்வேறு இலக்கிய நூல் வெளியீட்டு முயறசிகளில் தானும் ஒரு பங்காளியாக தொழிற்படுபவராகவும், இலக்கியங்கள், கவிதை மற்றும் இலக்கியச்செயறபாடுகள் என்பன தொடர்பான கறாரான அபிப்பிராயங்கள்; விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவராக தன்னை உருமாற்றி மெருகேறியுள்ளார்.


சிவசேகரனுடைய முதல் நூல் புதுக்கவிதை வடிவில் அமைந்திருந்தது. தொடர்ந்து வடமராட்சிக்கிழக்கின் ஒரு சில ஆலயங்கள் மீது இசைப்பாடல்களையும், ஆலய திருப்பொன்ஊஞ்சல்களையும் எழுதி; ஏற்கனவே சிந்து வகைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு
ஆஙகிலத்தில் Limarik என்ற அமைப்பை ஒத்த மஹாகவினால் ஈழத்தில் பிரபலப்பட்ட 'குறும்பா' என்ற ஒரு வகை சந்த கவி வடிவத்தையும் இவர் அநாயசமாகக் கையாண்டு 'ஒரு கூடைக் குறும்பூ' என்ற குறும்பாக்கள் கொண்ட நூலையும் வெளியிட்டிருந்தார். அதே சமகாலத்தில் நவீன 
கவிதைகளின் உத்தி முறைகளையும் உள்வாங்கி இன்று ஈழத்தில் வெளிவருகின்ற புது, நவீன, பின் நவீன 
கவிதைகளைப் போன்ற கவிதைகளையும் புதுமை மீதுற தனது தனித்தன்மையுடன் எழுதி வருகின்றார்.



'உயிலடி' வெளியீடாக தற்போது வெளியாகியுள்ள இவரது 'அந்நியத்தின் விலாசம ;' தொகுதியில்
நூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இதிலுள்ள கவிதைகள் நவீன, பின் நவீன சாயலை அதிகம் கொண்டுள்ளன.
இயல்பான திறமையும், தேசிக்கற்ற தமிழறிவு, வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடாக பெற்ற அனுபவமும், நவீன இலக்கியங்களின் அறிமுகமும், இலக்கிய கர்த்தாக்களுடனான 
இடையறாத ஊடாட்டமும ; சிவசேகரனின் கவிதைச் செல்நெறியை இன்று தீர்மானித்திருக்கின்றது. தன் புற அகச்சூழலின் நெருக்கடிகளை பிரச்சினைகளைத் தாண்டிக் கடந்து இலக்கிய மனதோடு தன் 
அனுபவங்களை தான் சந்தித்த நெருக்கடிகளை நேர்த்தியுடன் சிறந்த சொற்தெரிவுகளுடன் 
சொல்லிச் செல்லும ; வல்லமையை சிவசேகரன் பெற்றுள்ளார். இவரின் மரபு ஓசை வயப்பட்ட 
கவிதைகளினுடையதான பரீச்சயம் இவரின் சில புது கவிதைகளை வாசிக்கும் போது ஒரு 
ஒத்திசைவை ஒசை ஒழுங்கை எம்மனச் செவிகளில் கேட்க வைக்கிறது. 
 
புத்தன் உறையும் சுவர் எனும் கவிதையில் 
//
'திக்கெட்டும் தெறிக்கும ; 
வீரர்களின் குருதியில் கலந்து
நிலத்தோடு உறைகிறது
மனையார் இட்டு அனுப்பிய
வெற்றித்திலகங்கள்.' 
// என்றும்
 
இல்லாமலிருத்தல் எனும் கவிதையில் 
'இன்மைக்கும் இருத ;தலுக்கும் 
இடையில்
ஒரு கயிறாக துரோகத ;ததையும் 
மறு கயிறாக நேசத ;தையும் பிணைத ;து 
அட்டணக் காலிட்டு அமர ;ந்திருக்கும்
என் துயரத ;தின் ஊஞ ;சலை
பின்னிருந்து ஆட ;டுகிறது தனிமை' என்றும் 
 
 
குழந்தைகள் வாழ முடியாத பூமி எனும் கவிதையில் 
'வட்டமொன்றை வரைந்து முடித ;த அஷிரா 
அதற ;கு தலைப ;பிட்டிருந்தாள்
'இது
குழந்தைகள் வாழ முடியாத பூமி' என்றும்
 
இருட்டின ; கண ;கள் எனும் கவிதையில் 
'என்னை எட ;டிப ;பார ;க்கும் இருட்டிற ;கு 
நெற ;றிப ; பிடரி இருகன்னங்கள் என்று 
நான்கு சோடி குருணிக் கண்கள்
இச்சைகள் தீர்த ;து 
இளகிய தேகத்தில் காற்றை வாங்க 
யன்னல் திறந்து மூடும ; கணத ;தில்
பல்லியைப ;போல
மூலைச் சுவரோடு ஒட்டியபடி
கண்வெட்டாமல் என்னையே 
உற ;றுப ; பார்த்துக் கொண்டிருக்கிறது
கள்ள இருட்டு!' என்றும்
 
எனது நூற்றியிரண ;டாவது கொலை எனும் கவிதையில ; 
'உனக்கு நினைவிருக்கிறதா 
தொண்ணூற் றொன்பதாவது முறை 
உன ; மனசை நான்
கொலை செய ;து முடித ;த போது 
நீ சிரித ;த படியே உயிர்தெழுந்தாய்' என்றும்

தாய் மண ; எனும் கவிதையில் 
'கப ;பல் திருவிழாவுக்கு மட ;டும்
ஒன்றாய் வ Pட்டைவிட்டு
வெளிக்கிடும் நாங்கள்
முதன்முறையாய திருவிழா இல்லாமல் 
சேர்ந ;து புறப ;பட்டோம் ஊரையே விட்டு...' என்றும் 

துயிலாரில்லங்களில் வழியும் கண ;ண Pர் எனும் கவிதையில் 
'சத ;திரியர்களின் கனவுகள ; 
கானலாகின் போன தேசத ;தின் காதுகளில் 
ஒரு புதிய சுதந்திர கீதத ;தை 
வலிந்து நுழைக ;கிறது காற ;று
ஒரு பெருநேசத ;தின் தீராத கண ;ண Pராய ;
பொழியும் கார்த ;திகை மழை' என்றும்

துரோகியின் குழந்தை எனும் கவிதையில் 
'நாம் இனி பேசிக் கொள்ள 
எதுவுமில்லையென பிரிந ;த 
ஒரு இரவின ; பின் தான் 
பேசத ;தொடங்கின
உன ;னுடன் மழை
என்னுடன் கவிதை' என்றும்

அம்மா சொன்ன மழைக்கதை எனும் கவிதையில் 
'கறக் கறக்கென்று 
கத்தியே செத ;துத ; தொலைக்கும்
வாய்கள் பெருத ;த தவளைகளைக்கொண்டு
பூமியில் சாம நித ;திரையை
கலைத்துப ; போடுவதே மழைக்கு வேலை..' என்றும்

இரவைக் கொண்டாடுதல் எனும் கவிதையில் 
'கடல் குடித ;த மழையைப ; போல
இருள்
என்னைத ; தின்கிறது
இருள்
என்னை உயிர்விக்கிறது
இருளே என்னை
ப(ழி)லி வாங்கிக் கொ(ள்)ல்கிறது
பிறகெதற ;கு வெளிச்சம்
வா என்னுடன் 
இரவைக ; கொண ;டாடுவோம்..' என்றும்

கனவு : கதை: சாவு எனும் கவிதையில்
'எல்லோர் கனவிலும் 
குழந்தையாக
தாயாக
தந்தையாக
சகோதரமாக
காதலாக
திருமணமாக
குந ;தி இருந்தது சாவு!' என்றும்

அம்மாவின் மழை எனும் கவிதையில் 
'ஒழுக்குக்கு சட ;டியை வைத ;தபடி 
ஒரு வசையையும் இன்னொரு வசையில் 
கொட்டிலில ; இருக்கும்
அரை நனையல் விறகையும் 
அடுத ;த வரிசையில் தன் விதியையும்
கடைசியில் எங்களையும் வசைபாடுவாள்.
ஒரு கொடுமாரிக் குளிரில் 
அம்மாவின் அசைவு நின ;ற போது
நாங்கள ; எல்லோரும் முதலும் கடைசியுமாய ;
வசைபாடிக்கொண ;டே
நனைந ;தோம் மழையில்..
இதோ
இந்த மாரியில் கொட்டித ;தீர ;க்கும் மழையையும் 
அம்மா வ Pட ;டில் எங்கோ இருந்து 
வசை பாடிக் கொண்டே இருக்கிறாள்' என்றும்

சவக ;காலப ; பாடல் 2 எனும் கவிதையில் 
'கிருமிகள் தின ;ற மனிதர ;கள்
பேசிய கடைசி வார ;த்தைகளைக்
காவியபடி பிரபஞ்சம் முழுவதும் 
அலைந்து கொண்டிருக்கும் காற ;றில் 
கலந்து அழிகிறது
கணத ;திற ;கொரு சாவின் ஒலி..' என்றும்
ஒரு அந்நியனின் சுதந்திரக Pதம ; எனும் கவிதையில்
'என் தேசமெங ;கும் வேர் பதித ;த உனது
களையின் கிளைகளை ஒவ ;வொன்றாக
வெட்டிக் கொண்டிருக்கையில்
நீ எழுதி முடித ;திருந்தாய் எனக்கெதிரான அடிமைச ;சாசனத ;தை'
என்றும் ஒரு தேர்ந்த கவிஞனாக தன்னை சிவசேகரன் நிரூபித ;திருக்கின்றார்.

மேலும், அந்நியமாதல் 1 – 9 வரை
சித ;தார்த ;தன ; போகும் தெரு 1 – 3 வரை
காணாமல ; போன கதை 1 – 3 வரை
ஒரு அந்நியனின் சுதந்திர கீதம் 1 – 2 வரை என்று ஒரு தலைப்பில் பல கவிதைகளை எழுதி அவற்றுக்கிடையிலான தொடர்புகளை 
கோடிட்டுக் காட்டியும ; செல்கிறார்.
இதில் என்னால் சிலாகிக்கப்பட்ட பல கவிதைகளுக்கு இடையில் சிலவற ;றை வாசிக்கும் போது 
ஒரு தேவை கருதி, வேண்டுமென்று, ஒரு சாயலுடன் வர வேண்டும் என்ற நோக்கோடு, வாசகனுக்கு
மயக்கம ; குழப்பம ; ஏற்படுத ;தும் விதமாக சில கவிதைகள் செய்யப்பட்டுள்ளதோ என்ற நெருடல் எனக்கு ஏற ;பட்டது.
அந்நியமாதல் - 4, அந்நியமாதல் - 6, தவம், வாழ ;வென்பது, சவக்கால தோத்திரம், நூறாவது கால், வரம ;, அடைவு, சொல், ஆகிய கவிதைகள் சமூகத்திற்கு அல்லது தனி மனிதனுக்கு சொல்ல வரும ; கவிச் செய்தி என்ன கேள்வி எனக்குள் எழுந்தது. அதே நேரம் குழந்தைகள் வாழ முடியாத பூமி, என்னை உனக்கு நிரூபித்தல், தாய் மண், ஒரு அந்நியனின் சுதந்திர கீதம ;, தவிர்ப்பு, கனவின் ஆசை, 

கடவுளின் நேரலை, அவதாரம ;, ஆகிய கவிதைகள் எளிமை, தெளிவு, சொல் நேர்த்தி சமூகத்திற்கு அல்லது தனி மனிதருக்கு ஒரு கருத ;து அல்லது செய்தியை எடுத ;துச் சொல்லல் என்பவற ;றில் செம்மையானவையாக திகழ ;கின்றன. இவ் வேறுபாடு தான் நவீன, புதுக் கவிதைகளுக்கு இடையிலான வேறுபாடோ என்று எண ;ணத ; தோன்றுகிறது. 

இன்று ஈழத ;திலும் தமிழகத ;திலும் வெளி வரும ; அநேக புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் ஒரு நொடி, ஒரு புதிர், ஒரு விடுகதை போல ஒன்றுக்கொன்று முரண் தன்மையுள்ள விடயத்தைப் நெற ;றிப் 
பொட்டில் அடிப்பது போல பகிர்ந்து வாசகர ;களுக்கு ஒரு திடீர் அதிர்ச்சியை அல்லது ஒரு ஆச்சரியத ;தை ஏற்படுத்துபவையாக, முன்பில்லாத எமது மரபு மீறிய விடயங்களை வலிந்து பேசுபவையாக, புதிய சிந்தனைகளை கற்பனைகளை பகிர்பவையாக, எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கில் படைப்பாளி எதைச் சொல்ல முயல ;கிறார் என வாசகர்களைக் குழம ;ப வைக்கும் விதத்தில் இருண்மையோடு ; எழுதப்படுபவையாக, பல் பரிமாணக் கருத ;து கொண்டது என்ற ரீதியில் ஒரு விடயத்தை அல்லது செய்தியை நேரடியாக சொல்லாது பூடகமாக புரிதலுக்கு இடைஞ்சலாக பேசுபவையாக, தமிழ் இலக்கியங்களில் தவிர்க்கப்பட்ட பாலியல் ரீதியான சமாச்சாரங்கள் 
உட்பட சில விடயங்களை மறைமுகமாகவன்றி நேரடியாக பிரஸ்தாபிப்பவைகளாக, வழமையான
புழக்கத ;திலுள்ள வடிவங்களை அமைப்புக்களை கட்டுடைப்பவையாக, எழுதியவரே ஆச்சரியப்படும ; படி 
அவர் எண ;ணாத விடயங்களை விமர்சிப்போர் அர்த்தம ; கற ;பிக்க வைப்பவையாக, மேற ;கு நாடுகளில் 
அவர்களின ; வாழ ;க்கை முறைக்கேற ;ப முன் வைக்கப்பட்ட கோட்பாடுளூடாக அவர்களிலிருந்து வேறுபட்ட 
எமது வாழ்க்கை முறைமையை பார்க்கின்றனவாக, இன்று வெளி வந்து கொண்டிருக்கின ;றன. 
எமது வாழ்க்கை முறைமையை, நாம் சந்திக்கும ; நம் மண் சார்ந்த பிரச்சினைகளை, நன்மை
த Pமைகளை, நம் நிலத்தின் வானின் கடலின ; வாசத்தைப ; பற்றிப் பாடாமல் பேசாமல் அந்தரத ;தில் திரிசங்கு சொர்க்கத ;தில் நின்று கொண்டு அன்றாட வாழ ;வின் உணர்ச்சி மயப்பட்ட விடயங்களைத் தவிர்த்து அறிவார்ந்த தர்க்கம ; மிகுந்த வரண்ட சிந்தனைகளை மட்டும் வெளிப்படுத்தி வாசகர்களிடம ;
பரவிச் சென்று சேர்ந்து தொற்றும் தன்மையற்ற கல்லாய், இறுகித ; தனித்து செழுமை, குளுமையற ;றுக் கிடக்கின்ற இந்த நவீனப ; படைப்புக்களால் என்ன சமூகப் பயன் ஏற்படும ;, தனி மனித செயற்பாட்டில் 
என்ன தாக்கம ; நிகழும ; என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. மேலும் எழுதியவரின ; 
பெயரையும ; தலைப்பையும் மறைத்துவிட்டுப் பார்த ;தால் ஒன்று போலவே தோன்றும் படைப்புக்களை 
வலிந்து படைப்பதில் ஈழத்து நவீன கவிதைத ;துறை எந்த முன்னேற ;றத ;தையும் அடைந்து விடப ; போவதில்லை என்பதே யதார்த்தமானது.
தமிழில் சுமார் இரண்டாயிரம் ஆண ;டுகள் தொடர்ச்சியாக பயின்று வரும ; கவிதைகளில் சகல அம ;சங்களையும ; உள்வாங்கிய இன்றைய புதுக்கவிதைகளுக்கும் அடித்தளமாக விளங்கிய ஒரு நூற ;றாண்டுக்கு முன் வாழ ;ந்த பாரதியினைக் கூட பயிலாமல ;, அவனின் அறிமுகமில்லாமல், 'எங்களிடம ; 
எவையுமே இல்லை' என்ற மனப்பாங்கில் வெளிநாடுகளிலிருந ;து இறக்கி கடனாகப்பெற ;ற வெறும் 
'இசங்'களையும ; உத்தி முறைகளையும் மட்டும் பின்பற ;றி எம் தமிழில் தொடர்ச்சியாக இன்றும ; இருந்து
வருகின்ற கவிதையின் மரபுரிமையை முற்றாக மாற்றுவது மறைப்பது மறப்பது அல்லது புறக்கணிப்பது எமது மொழியின் தனித்துவ அடையாளங ;களை நாமே அழிக்க, சிதைக்க எடுக்கும ; முயற்சி தான் என்பேன். 


இன்று நவீனம ; பின் நவீனம ; என்ற போர்வைகளில் எழுதப்படுபவைகளில் அனேகமானவை எமது மண்ணின் மக்களின் வாழ ;வியல் உண்மைகளைப் பேசும் காலக் கண்ணாடிகளாக இல்லாமல் தம் தம்
மேதாவித ;தனத்தை காட்டவும், தம் பிரபலத ;திற ;கும ;, எவரிடமோ விருது அங்கீகாரத்திற ;குமாகவும், 
'அரோகரா' என எல ;லோரும ; சொல்லிக் கொண்டிருக்கின்ற போது 'ஐயோ' எனக் கத ;தி கவனயீர்ப்பு பெற முயல்வதற ;கும ;, எழுதப்படுகின்ற படைப்புக்களுமாவுமே தோன்றி முடிந்து போகின்றன. வெறும் இசங்களையும ; உத்திகளையும ; விமர்சனங்களையும ; நம ;பி படைக்கப்படும ; படைப்புக்கள் 
அர்த்தமற்றவையாகவே காலத்தின் த Pர்ப்பின் முன் சென்று தேய்ந்து இழிவதை நாம் மனதில் இருத ;திக்கொள்ள வேண்டும். 
சமூகத்தின் வௌ;வேறு மட்டங்களில் புழங்காமல் தம் தம் வட்டங்களுக்குள்ளும் 
குழுமங்களுக்குள்ளும் ஒரு சிலருக்கிடையிலும ; படைப்புக்களைப் படைத்து ஒப்பேற ;றி ஒவ்வொருவரும ; 
தமக்குப் பிடித ;த வரியொன்றிரண்டை ஒப்பிப்பதாலும ; 'இவையே சிறந்த படைப்புக்கள்' என்று ஒவ்வொரு 
குழுக்களைச் சேர்ந்தோரும ; தமக்கு உவப்பான படைப்பாளர்களை அவர்களின் படைப்புக்களின் 
பட்டியல்களை மாறி மாறி முதுகு சொறிந்து கூறிக் கொண்டிருப்பதாலும ; கடந்த காலங்களில் இலக்கிய 
முயற ;சிகளில் எவ்வாறு எதுவித முன்னேற ;றங ;களும் ஏற்படவில்லையோ அது போலவே எதுவித பலனும் முன்னேற ;றமும் இன்றும ; நாளையும ; ஏற ;படப் போவதில்லை என்பதனை இன்றைய தலைமுறை கருத ;தில் 
கொள்ள வேண்டும. எம் ஈழ மண்ணின் வாழ ;வோடு ஒட்டாத எம்மண்ணைப் பிரதி பலிக்காத எமது தனித்தன்மைகளை பெருமைகளை பிறருக்கு அறிமுகப்படுத்தாத போலியான பொய்யான படைப்புகளும ; விமர்சனங்களும் பயனற்றவையே. எம் மண்ணின் உயிர்ப்போடு எம ; வாழ ;வை வாழ ;க்கை முறைமைகளை உள்வாங்கி,
எமது பாரம்பரிய விழுமிய மரபுகளின் அடிப்டையில் நின்று கொண்டு, இன்றைய வாழ ;வைப் புதுமையான 
கண்ணோட்டத்தில் பார்த்து நாளைய நவீனத ;திற ;கு ஏற்றாப் போல் புதிய சிந்தனை எண்ணங்கள் 
கற ;பனைகளின் துணையோடு தேவையெனின் மேற ;கத்தைய நவீன உத்தி, சொல் முறைகளையும்
கறிக்கு உப்புப் போல் சேர்த ;துப ; படைக்கும் படைப்புக்கள் தான் எமது மொழியின் கூர்ப்புக்கும ; அதன் 
அடையாளத ;தை தனித ;துவத ;தை உறுதிப்படுத ;தி மேம ;படுத்தவும் ஈழத்தின் தனித் தன்மையான 
கவிதைப் பாரம்பரியத்தை மேம ;படுத்தவும் உதவும ; என்பேன். இதுவே இன்று இம்மண்ணில் எமக்கும் 
தேவையான கவிதைப் போக்கு என்பதும ; எனது அபிப்பிராயம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். முந்தை நாளைய புது ஃ நவீன கவிதை நேற ;றுப் பழைய கவிதையாகவும் நேற ;றைய புது ஃ நவீன கவிதை இன்றைய பழைய கவிதையாகவும் இன்றைய புது ஃ
நவீன கவிதை நாளைய புது ஃ நவீன கவிதையாக மாறும் என்பதே யதார்த்தம ;. இதனடிப்படையிலேயே 'இன்று நவீன கவிதையும ; வழக்கொழிந்து விட்டது' என்ற குரலும் கேட்கத ; தொடங்கியிருக்கின்றது.
ஆனால் தமிழும ; தமிழ்க் கவிதையும ; இன்றும ; இந்த நவீன யுகத ;திலும ; தம ; அடிப்படை இயல்புகளையும் 
பண்புகளையும ; அம ;சங்களையும ; மாற்றாமல் புதுமைகளை உள்வாங்கி தம்மைப் வளர்த்துக் கொண்டு 
செழித்தோங்கக் கூடிய வல்லமையோடு இயங்கிக்கொண்டிருக்கின ;றது என்பது நாமெல்லோரும ; பெருமை கொள்ளக் கூடிய விடயமாகும். எவ்வாறு மரபுக் கவிதைகளில் சில வகைகள் வெறும் சொல் விளையாட்டுக்களாக சொற ;சிலம ;பங ;களாக மாறி பேசிய விடயங்களையே ம Pள ம Pள பேசி அர்த்தமற்றது வழக்கொழிந்து 
போனதோ அது போலவே திடீர் அதிர்ச்சியையும் மயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடிய 
மீள்ள் வாசிப்புக்களில் ஆச்சரியங்களைத தராத வெறும் அயர்ச்சியை மட்டும ; ஏற்படுத்தக்கூடிய புது, நவீன 
கவிதைகளும் வாசகரிடமும் சமூகத்திடமும் காலத்தின் முன்பும் செல்லாக் காசுகளாக மாறக்கூடிய 
சூழலே ஏற்படும் என்பதையும் ஆர்ரள மிக்க இளம் கவிஞராக மண்ணின் மரபு வாசம் மாறாமல் படைக்கத்தொடங்கிய சிவசேகரன் மனம் கொள்ள வேண்டும் என்பது எனது அன்புரிமையுடனான 
வேண்டுகோள். இறுதியாக, ஈழத்தின் தவிர்க்க முடியாத இளம் கவிஞன் மாரீச மான் அல்லது பொய்மான்களின் பின் செல்லாமல் உண்மையான கவிதை மானை இனங்கண்டு ஒரு 'கவிமான்' ஆக 
வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

கவிஞர் இ.த.ஜெயசீலன்
10.05.2023




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்