இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" -பெரிய ஐங்கரன்

படம்
எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" - பு த்தனுக்கு ஞானம் கொடுத்த ஒற்றைப்போதிமரத்தை, பெரும்காடாக்கி நண்பனுக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவசேகரன். ஞானமடைவதற்குரிய வழிமுறையையும் நண்பனுக்குப் போதிக்கிறார். " நீ அறிவாயா புத்தனாதல் மிக மிக இலகு என்னோடு வா என் வீடு அருகில்தான் என் ஊரை விழுங்கிய போதிக்காட்டையே உனக்குப் பரிசளிக்கிறேன் அமர்ந்து கொள்" கவிஞன் பரிசளிக்கும் போதிக்காடு, ஒட்டுமொத்தமாக ஊரை விழுங்கிய பெரும் போதிக்காடு. இந்தப் போதிக்காடு, வானுயர வளர்ந்து கிளைபரப்பிச் செழித்துப் பச்சைப்பசேலென குளிர்மையும் நிழலும் தரும் காடல்ல. தரைமட்டமாய் விழுந்து தகிக்கும் சுடுகாடு. இறந்த பின்னர் எல்லோரும் போகும் சமரசம் உலாவும் சுடுகாடல்ல இது. வாழும்போதே கொல்லப்பட்ட பொதுஜனங்களின் பாரம்பரிய வாழ்விடந்தான், இந்தச் சுடுகாடு. போதிமரத்தில் ஒளி பெற்ற புத்தனை வழிபடும் பக்தர்கள், தீ மூட்டி எரித்த புனிதமான இடந்தான், இந்தச் சுடுகாடு. போதி மரத்தில் பெற்றுக்கொண்ட ஒளியால் இவ்வூரை எரித்து ஒளியூட்டி குளிர் காய்ந்தார்கள். அதனால், "போதிக்காடு" இவ்வூரின் காரணப்பெயர் ஆயிற்ற...

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்

படம்
00000 எறும்புகளின் அடுக்குமாடிக்குடியிருப்பு ******** பதினைந்தாம் மாடியை அஷிரா கட்டிமுடிக்கும்போது நானும் அவளுடன் கொத்தனாராய் இணைந்து கொண்டேன்.. ஒவ்வொரு மாடிக்கும் ஒவ்வொரு வர்ணம் அடிப்பதென்று எனக்கு நினைவூட்டிவிட்டு தொடர்ந்து கட்டிக்கொண்டிருந்தாள் அடுக்குமாடிக்குடியிருப்பை எவ்வித சலனமுமற்றபடி.. பதினெட்டாம் மாடியினை அவள் கட்டிமுடிக்கும் போது முதலாம் மாடியில் முண்டியடித்து ஏறிகொண்டிருந்தன அன்பின் வாசனையை மோப்பம் பிடித்துவந்த எறும்புகள்... ஓ.. இப்போதுதான் புரிந்தது நேற்றுக் கொட்டிய பேய்மழையில் இரைதேடி அலைந்து திரிந்த எறும்புகள் வீடுதிரும்ப பட்ட தவிப்பையும் அவற்றின் நிலக்கீழ் வீட்டுக்குள் மழை புகுந்து மூடியதையும் தாழ்வாரத்து மழைத்தண்ணீரை ஏந்தி விளையாடிகொண்டிருந்த அஷிரா கண்டிருக்கக் கூடும்.. அதோ சிறகில்லாத பட்டாம்பூச்சி கைகொட்டிப் பறக்கிறது பாருங்கள்..! © எஸ்.சிவசேகரன் -2018

கவிதை - எஸ்.சிவசேகரன் -அஷிராவின் மடியோடு தொலையும் காலம்

படம்
தனிமை 000000 பூமியின் நிஷப்தத்தை விழுங்கி மெல்லமெல்ல ஜீரணித்துக்கொண்டிருக்கும் இந்த நடுநிசி நிலவுக்கு எனதும் உனதும் தனிமையின் வலிதெரிய வாய்ப்பில்லை அஷிரா.. நிலவு விழுங்கும் நிஷப்தத்தை குலைத்துவிட இலைகளின் காதோரம் கவிதைசொல்லிக்கொண்டு அதோ பார் உல்லாசமாய் பறந்துபோகிறது அந்த இரக்கமில்லாக் காற்று... தனிமை வரமென்றும் ஏகாந்தம் இனிமையென்றும் சொல்லியவர்களை என்னோடு சேர்ந்து உனக்காகவும் சபித்துக்கொண்டிருக்கிறது உன்னைப்போல துணை இழந்த காட்டான் குருவியொன்று விரகதாப மோகவிம்சை விஷத்தை பருக்கிவிட்டு கவலைக்குள் முழுக்கி கண்ணீரில் அவித்து இரக்கமும் இரத்தமுமின்றி கொல்ல நான்கு சுவருக்குள் ஒரு நரகத்தை கட்டியாள்கிறது நம் தனிமை.. சத்தமின்றி எவ்வாறு அழுவது என்பதையும் தனிமை நமக்கு கற்றுத்தந்திருக்கிறது எழுதி வை... ஒரு கவிதை நேற்றைய என் தனிமையையும் நாளைய உன் தனிமையையும் கவிதையே சொல்லட்டும் இந்த உலகுக்கு... எஸ்.சிவசேகரன் -2018

எஸ்.சிவசேகரன்- கவிதை

படம்
உருவழிந்த மிருகம் ############### எங்கோ தொலைவில் எவரோ ஒருவர் "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்றதற்காய் கைகள் உயர்த்திய என் தோழா! கால்களில் மிதிபட்ட என் மாதா! நீங்கள் எட்டிப்பார்க்கும் தூரத்தில் என் உரிமை பறிக்கப்பட்டபோதும் உடமை எரிக்கப்பட்டபோதும் கால்கள் முறிக்கப்பட்டபோதும் கண்கள் இடுங்கப்பட்டபோதும் குரல்வளை நெரிக்கப்பட்டபோதும் குழந்தைகள் குதறப்பட்டபோதும் கற்பு களவாடப்பட்டபோதும் மார்பு அறுக்கப்பட்டபோதும் குறியில் குண்டுவைக்கைப்பட்டபோதும் குலமே கொன்றொழிக்கப்பட்டபோதும் பாவம் உங்களுக்கு கைகள் முளைக்கவில்லை கண்கள் திறக்கவில்லை நாக்கு வளரவில்லை என்னும் உண்மை நேற்றுத்தான் எனக்குத்தெரியும் மன்னித்துவிடுங்கள் என்ன செய்ய உங்களுடன் சேர்ந்து ஊர்வலம் வர எனக்கு கால்கள் இல்லை கைகள் உயர்த்த எனக்கு கைகள் இல்லை குரல் கொடுக்க எனக்கு நாக்கு இல்லை மாளிகாவத்தை செருப்புகளும் கெப்பட்டிப்பொல சுமணசேனவும் என்னை மன்னிக்கட்டும் உங்களுக்காய் நியாயம் சொல்ல நான் மனிதன் அல்ல தோழா! நான் மனிதன் அல்ல தாயே! உங்கள் மொழியில் நானொரு உருவழிந்த மிருகம் 00 எ...

அலறி - மழையை எனக்கு மொழிந்தவன்

படம்
மழையை எனக்கு மொழிந்தவன் மழலை(யை) எனக்கு பொழிந்தவன் # இந்த சின்னப்பொடியனின் வெறும் பத்தாண்டுகால தீவிர இலக்கிய - வாசக அனுபவத்தில் (அதன் முன்னரே நான் பொழுதுபோக்கு வாசிப்பில் இறங்கிவிட்டேன்) ஈழத்து இல்லக்கியர்களில் பழமை தொடங்கி புதுமை வரை  பருமட்டாக 500ற்கும் மேற்பட்டவர்களை ( அச்சுப்புத்தகங்கள் & எண்ணிம புத்தகங்கள் - PDF) வாசித்துவிட்டேன். எனது ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை கவிதை என் அபிமானத்துக்குரியதாக இருப்பதும்; இறுதிவரை கவிதையுடனே இருக்க வேண்டும் என்பதும் என் பாக்கியம். எனது தமிழாசான்களில் ஒருவரும் கவிஞருமான கலாநிதி சு.குணேஸ்வரனின் (கவிஞர் துவாரகன்) "மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" தொகுப்பில் தொடங்கிய என் கவிதை வாசிப்பு, ஒவ்வொரு நாளும் 5 நல்ல கவிதைகளையாவது படித்தால்தான் நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்னும் நிலைக்கு வந்து நிற்கிறது. இந்த பித்துநிலைக்கு மூலகாரணம் என் ஆரம்பகால வாசிப்பில் முதலிடம் பெற்றிருந்த கவிஞர்கள் என்றால் மிகையில்லை. நான் தீவிர வாசிப்பில் இறங்கிய காலம் ஈழத்து கொடும்போரொலி நிசப்தமாகியிருந்த காலம். அதனாலோ என்னவோ என் வாசிப்பு போர்-வலி-புலம...

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

படம்
மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - -அபூர்வன்-   ச மூகத்தின் பதற்றத்தை ஆழமான புரிதலோடு தரிசித்து, நிதானமான மொழியிலேயே வெளிப்படுத்துபவனாக கவிஞன் இனங்காணப்படுகிறான். தேடலின் பேறான கொண்டாட்டத்தை அல்லது அடையப் பெறாமையின் வலியை கட்டிறுக்கமான மொழியிலே வெளிப்படுத்த முயல்கிறான்.         அகத்தும் பிறத்தும் நிகழும் முரண் உறவை மொழி முகாமைத்துவத்தின் ஊடாக வாசகனில் தொற்றச் செய்துவிடுகிறான். கவிதைக்குள்ளே கட்புலனாகா தன்மையினையும் ( invisible ) கட்புலனாகும் தன்மையினையும் ஒருங்கே புதைக்கும் ஆற்றலோடு அமைகின்றான்.        பிற துறைகளை போன்று கவிதையும் படிமுறை அடுக்குகளோடு அமைந்ததுதான்.       நியூட்டனின் புவியீர்ப்பு விசையை கற்கும் மாணவன் புரிதல் முயற்சியில் அதனை கடந்தேகி, ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு மெய்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு பயணிக்கிறான். அதுபோல எளிமையில் இருந்து தீவிரத் தன்மைக்கு கவிஞனும் புலம்பெயர்கின்றான்.      இப் பண்புக்கான சாத்தியங்களை எதிர்காலத்தில் நல்கும்...

படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக்

படம்
படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக் 00 மீன் தொட்டவன் எல்லாம் அபச்சாரியாம் கோவில் குருக்கள் சொன்னார் கருவறைக்குள் இருந்து சிரித்தது மீன்களோடு உண்டு வாழ்ந்த வெண்சங்கு (தலைப்பில்லாத கவிதைகள் 2) 0 காலைப்பனி பூமித்தாயை முத்தமிட மூச்சு வாங்க ஓடி வந்து இலை ஊஞ்சல் ஆடி இளைப்பாறிக் கொண்டிருக்கும் முத்து குழந்தை  0 நிலாச்சாரல்  இந்த நிலவுக்கும் இரவுக்கும் ஒழித்து விளையாட கற்றுக் கொடுத்தவர் யார் ஒரு தரம் நிலவுக்கு பின்னால் இருளும் மறுதரம் இருளுக்கு பின்னால் நிலவும் ஒளிக்கிறதே  (குட்டி கவிதைகள்) 0 விதி செய்த சதியால்  வெள்ளையடிக்கப்பட்ட வண்ண ஓவியம் அவள் மணமாகி சிலநாளில் தன் பணியை தின்றவளாம் அயலவர் வாய்க்கு கிடைத்த அவல் எத்தனை கதவுகள் தட்டி இருப்பாள் வாசல் கதவுகளினாலேயே விரட்டப்பட்டாள் அவள்  இப்போதவள் தட்டுவதை நிறுத்தி விட்டாள் நடுராத்திரியில் அதிகமாக தட்டப்படுகிறது அவளின் கொல்லைப்புற கதவு  00 சிவசேகரன் அண்மைக்காலத்தில் புதுக்கவிதைகளாலும் குறும்பாக்களாலும் வாசகர்களை கவர்ந்த வருபவர். எழ...

எஸ்.சிவசேகரன் கவிதைகள் - 02

படம்
மீளப்பெறுதல் ## முடிவான ஒரு அந்நியத்தை மீளப்பெறுதல் அவ்வளவு எளிதல்ல அஷிரா! உடைந்த கதிரைகளைப்போல கிழிந்த தகரங்களைப்போல சிதைந்த குழாய்களைப்போல அறுந்த வயர்களைப்போல மீளத்தருதல் சாத்தியமெனில் ஒவ்வொரு ஒழுங்கைகளாக உரக்ககத்திய வார்த்தைகளை என்ன செய்ய...? ஒவ்வொரு வாசலிலும் உமிழ்ந்துவிட்ட வசைகளை என்ன செய்ய...? ஒவ்வொரு உடலிலும் சாத்திவிட்ட அடிகளை என்ன செய்ய...? கழுத்தை உரசிய வாள்கள் கொடுத்துவிட்ட பயத்தை என்ன செய்ய...? வார்த்தைகள் கதிரைகளல்ல வசைகள் தகரங்களல்ல அடிகள் குழாய்களல்ல பயம் வயர் அல்ல அவை நம் அந்நியத்துக்கான சாசனத்தின் இறுதிச்சரத்துகள் 00 ஏகலைவனின் எச்சம் ********************* துரோணரே! யுகம் சில கடந்து உம்மைக்காண வந்திருக்கிறேன் தமக்கென் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் எந்தைக்கும் எனக்குமான மானசீக குருவே! உம்மால் எல்லைகள் கடந்து யுகசந்தியாய் அலைந்து அலைந்து விடையொன்று கண்டு உம்மிடம் மீண்டேன்.. எந்த யுகத்திலும் வில்லுக்கு விஜயன் அல்ல. கர்ணனும் அல்ல.. துரோணனும் அல்ல.. பரசுராமனும் அல்ல.. அவன் சீடன் பீஷ்மனும் அல்ல... நான்.. நானேதான்....

எஸ்.சிவசேகரன் கவிதை- இரணை மடுவே ஏழாம் கங்கையே -

படம்
ஓ பேராறே! நீயா துயில்கிறாய்?? 00 கொட்டிய மாரியில் குதூகலித்து குமரியாய் குதித்தோடி ஈர் எட்டடி பாய்ந்து எம்நிலம் மறைத்த பேரிளங்குமரியே..! நீயா துயில்கிறாய்..? 0 காய்ச்சிய கஞ்சியை வாய் ருசிக்க முன்னர் பீச்சியடித்த உன் பெருங்கை நீரினால் மூச்செடுத்தோடவிட்டு மூர்க்கமாய் வந்து எம் நிலம் மூடிவிட்ட நீயா மூச்சடக்கித் துயில்கிறாய்..? 0 சின்னஞ்சிறுசோடு சீவனைக் கையில்கொண்டு தெருவெல்லாம் சிதறி ஓடவைத்த ஒப்பற்ற எம்நில ஓவியமே நீயா இங்கு சலனமாய் துயில்கிறாய்..? 0 இலங்கைத்தாயின் மடியில் தவழும் ஏழாம் நங்கையே..! இரணைமடுவாய் விரிந்து கிடக்கும் வடக்கின் கங்கையே..! நஞ்சையும் குஞ்சையும் நாற்புறமும் செழித்து பஞ்சமென்னும் சொல்லை பாமரர் மறக்க தஞ்சமென வந்த தவத்திரு மகளே..! சொல் நீயா நம்மை அழிக்கப் பொங்கினாய்.? 0 தென்னகம் வந்துந்தன் தேகம் தழுவிவரும் தென்றலை சுகித்திட்டு எம்மிடம் இல்லையே இந்த எழிலென்று சந்ததம் சொல்லிடும் வன்னியின் எழிலியே..! சொல் நீயா நம்மை அழிக்கப் பொங்கினாய்? 0 மூவாயிரம் ஆண்டு மூத்த எம் குடிகளின் நிறமூர்த்தமெல்லாம் நெஞ்சுக்குள் ந...

சிறந்த கவிதை வடிவமைப்பாளனின் கவிதைகள் - கவிஞர் அனாதியன்

படம்
        உ ரையாடல்கள் இல்லாமல்; சந்திப்புகள் இல்லாமல் கவிதைகளுக்கு ஊடாகவே நேசங்களை கொண்டாட முடியும் எனும் உண்மையை எனக்கு சொல்லித் தந்திருக்கிறார் கவிஞர் எஸ். சிவசேகரன். இணையங்களில் எல்லோருடைய கவிதைகளையும் படிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வேலைகளும் நேரமின்மையும் பலசமயம் ரசனைகளை புசித்துக் கொள்கிறது. அந்த காரணம் தான் இவர் எழுத்துகளை என்னால் படிக்க முடியாமல் போனது என நினைக்கிறேன். எஸ்.சிவசேகரன் எனும் பெயரில் கவிதைகளை எழுதும் இவரிடம் ஒரு தீவிர வாசகனை காண்கிறேன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த கவிதை வடிவமைப்பாளனைக் காண்கிறேன். இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் சொல்லாடல் உத்தி தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியிருக்கிறது. இவரின் பெரும்பாலான கவிதைகளில் சமூக அக்கறை தென்படுகிறது பின்வரும் கவிதை ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு குரலாய் எஸ் சிவசேகரனிடமிருந்து ஒலிக்கிறது 00 எங்கள் விரல்களிலிருந்து சொட்டும் இரத்தத்தை குடித்து உடல் வளர்க்கும் இரண்டுகால் அட்டைகளே! கொழுந்து கொய்யும் கைவிரல்கள் ஒரு நாள் உங...

எஸ்.சிவசேகரன் கவிதைகள்

படம்
துயிலாரில்லங்களில் வழியும் கண்ணீர் 0 சரித்திரத்தால் சலவை செய்யப்பட்டு சத்திரியராக்கப்பட்ட சாமானியர்களின் கனவுகள் கானலாகிப்போன தேசத்தின் காதுகளில் மீண்டும் திணிக்கப்படுகிறது ஒரு சுதந்திர கீதம்... 0 திரும்பும் திசையெங்கிலும் துகிலுரியப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் எண்ணில்லா உடல்களிலிருந்தும் வழியும் குருதியை கழுவிக் கழுவி துடைத்துக்கொண்டிருக்கிறது ஒரு பெருநேசத்தின் தீராத கண்ணீர் 0 நிமிர்ந்து ஒளிரும் ஒவ்வொரு சுடர்களிலும் மிளிர்வாய் தெரிகிறது எட்டுத்திக்கும் ஓடியலைந்து உறங்கிக்கிடந்த சத்திரியர்களின் துயில் குலைந்து சிவந்த கண்கள்...! 0 யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி அயற்சொற்களைப் பிரிந்து தலைகீழாய் வீழ்ந்து கிடக்கும் " தாகம் " என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அறிந்த வீழாத சத்திரியர்களின் நிசப்த விம்மலின் அதிர்வில் கலங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு சுடரும்....! 00 2017 பரிசு 0 அடுக்கடுக்காய் அவனிடம் குவிந்துகிடந்தன அவளை வசப்படுத்தும் வசீயப்பரிசுகள் அவள் சொல்லும் அத்தனைக்கும் தலையாட்டி பொம்மையாய் அவன...