இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" -பெரிய ஐங்கரன்

படம்
எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" - பு த்தனுக்கு ஞானம் கொடுத்த ஒற்றைப்போதிமரத்தை, பெரும்காடாக்கி நண்பனுக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவசேகரன். ஞானமடைவதற்குரிய வழிமுறையையும் நண்பனுக்குப் போதிக்கிறார். " நீ அறிவாயா புத்தனாதல் மிக மிக இலகு என்னோடு வா என் வீடு அருகில்தான் என் ஊரை விழுங்கிய போதிக்காட்டையே உனக்குப் பரிசளிக்கிறேன் அமர்ந்து கொள்" கவிஞன் பரிசளிக்கும் போதிக்காடு, ஒட்டுமொத்தமாக ஊரை விழுங்கிய பெரும் போதிக்காடு. இந்தப் போதிக்காடு, வானுயர வளர்ந்து கிளைபரப்பிச் செழித்துப் பச்சைப்பசேலென குளிர்மையும் நிழலும் தரும் காடல்ல. தரைமட்டமாய் விழுந்து தகிக்கும் சுடுகாடு. இறந்த பின்னர் எல்லோரும் போகும் சமரசம் உலாவும் சுடுகாடல்ல இது. வாழும்போதே கொல்லப்பட்ட பொதுஜனங்களின் பாரம்பரிய வாழ்விடந்தான், இந்தச் சுடுகாடு. போதிமரத்தில் ஒளி பெற்ற புத்தனை வழிபடும் பக்தர்கள், தீ மூட்டி எரித்த புனிதமான இடந்தான், இந்தச் சுடுகாடு. போதி மரத்தில் பெற்றுக்கொண்ட ஒளியால் இவ்வூரை எரித்து ஒளியூட்டி குளிர் காய்ந்தார்கள். அதனால், "போதிக்காடு" இவ்வூரின் காரணப்பெயர் ஆயிற்ற...

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்

படம்
00000 எறும்புகளின் அடுக்குமாடிக்குடியிருப்பு ******** பதினைந்தாம் மாடியை அஷிரா கட்டிமுடிக்கும்போது நானும் அவளுடன் கொத்தனாராய் இணைந்து கொண்டேன்.. ஒவ்வொரு மாடிக்கும் ஒவ்வொரு வர்ணம் அடிப்பதென்று எனக்கு நினைவூட்டிவிட்டு தொடர்ந்து கட்டிக்கொண்டிருந்தாள் அடுக்குமாடிக்குடியிருப்பை எவ்வித சலனமுமற்றபடி.. பதினெட்டாம் மாடியினை அவள் கட்டிமுடிக்கும் போது முதலாம் மாடியில் முண்டியடித்து ஏறிகொண்டிருந்தன அன்பின் வாசனையை மோப்பம் பிடித்துவந்த எறும்புகள்... ஓ.. இப்போதுதான் புரிந்தது நேற்றுக் கொட்டிய பேய்மழையில் இரைதேடி அலைந்து திரிந்த எறும்புகள் வீடுதிரும்ப பட்ட தவிப்பையும் அவற்றின் நிலக்கீழ் வீட்டுக்குள் மழை புகுந்து மூடியதையும் தாழ்வாரத்து மழைத்தண்ணீரை ஏந்தி விளையாடிகொண்டிருந்த அஷிரா கண்டிருக்கக் கூடும்.. அதோ சிறகில்லாத பட்டாம்பூச்சி கைகொட்டிப் பறக்கிறது பாருங்கள்..! © எஸ்.சிவசேகரன் -2018

கவிதை - எஸ்.சிவசேகரன் -அஷிராவின் மடியோடு தொலையும் காலம்

படம்
தனிமை 000000 பூமியின் நிஷப்தத்தை விழுங்கி மெல்லமெல்ல ஜீரணித்துக்கொண்டிருக்கும் இந்த நடுநிசி நிலவுக்கு எனதும் உனதும் தனிமையின் வலிதெரிய வாய்ப்பில்லை அஷிரா.. நிலவு விழுங்கும் நிஷப்தத்தை குலைத்துவிட இலைகளின் காதோரம் கவிதைசொல்லிக்கொண்டு அதோ பார் உல்லாசமாய் பறந்துபோகிறது அந்த இரக்கமில்லாக் காற்று... தனிமை வரமென்றும் ஏகாந்தம் இனிமையென்றும் சொல்லியவர்களை என்னோடு சேர்ந்து உனக்காகவும் சபித்துக்கொண்டிருக்கிறது உன்னைப்போல துணை இழந்த காட்டான் குருவியொன்று விரகதாப மோகவிம்சை விஷத்தை பருக்கிவிட்டு கவலைக்குள் முழுக்கி கண்ணீரில் அவித்து இரக்கமும் இரத்தமுமின்றி கொல்ல நான்கு சுவருக்குள் ஒரு நரகத்தை கட்டியாள்கிறது நம் தனிமை.. சத்தமின்றி எவ்வாறு அழுவது என்பதையும் தனிமை நமக்கு கற்றுத்தந்திருக்கிறது எழுதி வை... ஒரு கவிதை நேற்றைய என் தனிமையையும் நாளைய உன் தனிமையையும் கவிதையே சொல்லட்டும் இந்த உலகுக்கு... எஸ்.சிவசேகரன் -2018

எஸ்.சிவசேகரன்- கவிதை

படம்
உருவழிந்த மிருகம் ############### எங்கோ தொலைவில் எவரோ ஒருவர் "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்றதற்காய் கைகள் உயர்த்திய என் தோழா! கால்களில் மிதிபட்ட என் மாதா! நீங்கள் எட்டிப்பார்க்கும் தூரத்தில் என் உரிமை பறிக்கப்பட்டபோதும் உடமை எரிக்கப்பட்டபோதும் கால்கள் முறிக்கப்பட்டபோதும் கண்கள் இடுங்கப்பட்டபோதும் குரல்வளை நெரிக்கப்பட்டபோதும் குழந்தைகள் குதறப்பட்டபோதும் கற்பு களவாடப்பட்டபோதும் மார்பு அறுக்கப்பட்டபோதும் குறியில் குண்டுவைக்கைப்பட்டபோதும் குலமே கொன்றொழிக்கப்பட்டபோதும் பாவம் உங்களுக்கு கைகள் முளைக்கவில்லை கண்கள் திறக்கவில்லை நாக்கு வளரவில்லை என்னும் உண்மை நேற்றுத்தான் எனக்குத்தெரியும் மன்னித்துவிடுங்கள் என்ன செய்ய உங்களுடன் சேர்ந்து ஊர்வலம் வர எனக்கு கால்கள் இல்லை கைகள் உயர்த்த எனக்கு கைகள் இல்லை குரல் கொடுக்க எனக்கு நாக்கு இல்லை மாளிகாவத்தை செருப்புகளும் கெப்பட்டிப்பொல சுமணசேனவும் என்னை மன்னிக்கட்டும் உங்களுக்காய் நியாயம் சொல்ல நான் மனிதன் அல்ல தோழா! நான் மனிதன் அல்ல தாயே! உங்கள் மொழியில் நானொரு உருவழிந்த மிருகம் 00 எ...

அலறி - மழையை எனக்கு மொழிந்தவன்

படம்
மழையை எனக்கு மொழிந்தவன் மழலை(யை) எனக்கு பொழிந்தவன் # இந்த சின்னப்பொடியனின் வெறும் பத்தாண்டுகால தீவிர இலக்கிய - வாசக அனுபவத்தில் (அதன் முன்னரே நான் பொழுதுபோக்கு வாசிப்பில் இறங்கிவிட்டேன்) ஈழத்து இல்லக்கியர்களில் பழமை தொடங்கி புதுமை வரை  பருமட்டாக 500ற்கும் மேற்பட்டவர்களை ( அச்சுப்புத்தகங்கள் & எண்ணிம புத்தகங்கள் - PDF) வாசித்துவிட்டேன். எனது ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை கவிதை என் அபிமானத்துக்குரியதாக இருப்பதும்; இறுதிவரை கவிதையுடனே இருக்க வேண்டும் என்பதும் என் பாக்கியம். எனது தமிழாசான்களில் ஒருவரும் கவிஞருமான கலாநிதி சு.குணேஸ்வரனின் (கவிஞர் துவாரகன்) "மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" தொகுப்பில் தொடங்கிய என் கவிதை வாசிப்பு, ஒவ்வொரு நாளும் 5 நல்ல கவிதைகளையாவது படித்தால்தான் நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்னும் நிலைக்கு வந்து நிற்கிறது. இந்த பித்துநிலைக்கு மூலகாரணம் என் ஆரம்பகால வாசிப்பில் முதலிடம் பெற்றிருந்த கவிஞர்கள் என்றால் மிகையில்லை. நான் தீவிர வாசிப்பில் இறங்கிய காலம் ஈழத்து கொடும்போரொலி நிசப்தமாகியிருந்த காலம். அதனாலோ என்னவோ என் வாசிப்பு போர்-வலி-புலம...

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

படம்
மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - -அபூர்வன்-   ச மூகத்தின் பதற்றத்தை ஆழமான புரிதலோடு தரிசித்து, நிதானமான மொழியிலேயே வெளிப்படுத்துபவனாக கவிஞன் இனங்காணப்படுகிறான். தேடலின் பேறான கொண்டாட்டத்தை அல்லது அடையப் பெறாமையின் வலியை கட்டிறுக்கமான மொழியிலே வெளிப்படுத்த முயல்கிறான்.         அகத்தும் பிறத்தும் நிகழும் முரண் உறவை மொழி முகாமைத்துவத்தின் ஊடாக வாசகனில் தொற்றச் செய்துவிடுகிறான். கவிதைக்குள்ளே கட்புலனாகா தன்மையினையும் ( invisible ) கட்புலனாகும் தன்மையினையும் ஒருங்கே புதைக்கும் ஆற்றலோடு அமைகின்றான்.        பிற துறைகளை போன்று கவிதையும் படிமுறை அடுக்குகளோடு அமைந்ததுதான்.       நியூட்டனின் புவியீர்ப்பு விசையை கற்கும் மாணவன் புரிதல் முயற்சியில் அதனை கடந்தேகி, ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு மெய்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு பயணிக்கிறான். அதுபோல எளிமையில் இருந்து தீவிரத் தன்மைக்கு கவிஞனும் புலம்பெயர்கின்றான்.      இப் பண்புக்கான சாத்தியங்களை எதிர்காலத்தில் நல்கும்...