ஒரு உதவாக்கரை விமர்சகனுக்கு ஒரு உதவாக்கரை கவிஞனின் விமர்சனம் # ஈழத்து நவீன (கவிதை) எழுத்தின் போக்கு பற்றிய அண்மைய உரையாடல்கள் என்னை இதை எழுத வைத்தது. ஈழத்தில் சிலர் விமர்சனம் / மதிப்பிடல் என்கிற பெயரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுதும் திறந்த மடல் இது. 00 உங்கள் உதவாக்கரை மதிப்பிடல்களாலதான் இன்னமும் தமிழக எழுத்து முன்னிலை பெற்றுக்கொண்டு போகிறது. இளைய தலைமுறைக்கு கூட புதிய தமிழக எழுத்தாளர்கள் தெரிந்திருக்கிறார்கள். அவர்களின் புதிய எழுத்துகள் சக, மூத்த முன்னிலை எழுத்தாளர்களால் கவனிக்கப் பட்டும், பொது வெளிகளில் அறிமுகம் செய்தும் வருவது இதற்கு காரணம். ஆனால் இங்கு, எத்தனை இளம் எழுத்தாளர்கள் மூத்த, முன்னிலை எழுத்தாளர்களால் கண்டுகொள்ளப்படுகிறார்கள்? அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்? இங்கு ஒரு கண்காட்சியில், கடைகளில் ஒரு புத்தகம் 50 பிரதி கூட விற்பனை ஆவதில்லை என பலர் அங்கலாயக்க்கிரார்கள். இங்குள்ள புத்தகக் கூடங்களில் 80 சதவிகிதம் தமிழக நூல்களே உள்ளன. இதற்கு யார் காரணம். ஒரே காரணம் உதவாக்கரை மதிப்பிடல்களும் விமர்சனங்களும். புதிய ...