சிவசேகரன் - கவிதை

 


//

ஆஷிரா!

ஒன்று

இல்லையென்றானபின்

நாம் ஏன்

கேள்விகளோடு 

அதன் பின்னலைகிறோம்


"அதுவொரு

நினைவுச் சுவட்டின் எச்சம்

தொடர்வதே வரம்"


"அதுவொரு

நேசத்தின் கடைசி எத்தனம்

இறுதிவரை"


"அதுவொரு

விசுவாசத்தின் கருணை மனு

ஏற்பும் மறுப்பும் பின்னர்"


"அதுவொரு

பாவியின் இறுதி ஆசை

அலைந்தே இறப்பது மேல்"


சொல்

நீ என்ன கேள்வியோடு அலைகிறாய்?

0


//

06.20

27.11.2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்