விமர்சனம் - சிவசேகரன்

 ஒரு

உதவாக்கரை விமர்சகனுக்கு

ஒரு

உதவாக்கரை கவிஞனின் 

விமர்சனம்



#


ஈழத்து நவீன (கவிதை) எழுத்தின் போக்கு பற்றிய அண்மைய உரையாடல்கள் என்னை இதை எழுத வைத்தது. ஈழத்தில் சிலர் விமர்சனம் / மதிப்பிடல் என்கிற பெயரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் எழுதும் திறந்த மடல் இது.

00


உங்கள் உதவாக்கரை

மதிப்பிடல்களாலதான்

இன்னமும் தமிழக எழுத்து முன்னிலை பெற்றுக்கொண்டு போகிறது.


இளைய தலைமுறைக்கு கூட புதிய தமிழக எழுத்தாளர்கள் தெரிந்திருக்கிறார்கள்.

அவர்களின் புதிய எழுத்துகள் சக, மூத்த முன்னிலை எழுத்தாளர்களால் கவனிக்கப் பட்டும், பொது வெளிகளில் அறிமுகம் செய்தும் வருவது இதற்கு காரணம்.

ஆனால் இங்கு,

எத்தனை இளம் எழுத்தாளர்கள் மூத்த, முன்னிலை எழுத்தாளர்களால் கண்டுகொள்ளப்படுகிறார்கள்? அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்?

இங்கு ஒரு கண்காட்சியில், கடைகளில்

ஒரு புத்தகம் 50 பிரதி கூட விற்பனை ஆவதில்லை என பலர் அங்கலாயக்க்கிரார்கள்.

இங்குள்ள புத்தகக் கூடங்களில் 80 சதவிகிதம் தமிழக நூல்களே உள்ளன.


இதற்கு யார் காரணம்.

ஒரே காரணம்

உதவாக்கரை மதிப்பிடல்களும் விமர்சனங்களும்.


புதிய கையாளல் முறைகளை சீ.. என்று உதரிவிடும் உங்கள் படித்த திமிர் விமர்சனங்கள் பலரை எழுத்தையே ஒதுக்க வைக்கிறது.


மதிப்பிடல்/ விமர்சனம் செய்யும்போது எழுத்தை வளப்படுத்தி வளர்க்கும் நோக்குடன் செய்ய வேண்டியது ஒரு விமர்சகன் இலக்கியத்துக்கு செய்ய வேண்டிய கடமை.

குழி தோண்டி புதைக்கும் நோக்குடன் ஒதுக்கி கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.


ஏண்டாப்பா,

ஈழத்து நவீன கவிதை

இன்னமும் சேரனிட்டையும், ஜெய பாலனிட்டயும், செவ்விந்தியன், அகிலன், கிட்டயுமா இருக்கு?


நவீன தமிழ்க் கவிதை இன்னொரு ரூபத்தை எடுத்து போய்க்கொண்டிருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரியலையா?


ராசாக்கள்,

2021 வந்திட்டுது..

நீங்கள் இன்னும் 1990 லயே இருக்கியள்


இந்த 30 வருசத்தில

இன்னுமா ஒரு நவீன கவிஞன்

உங்கட கண்ணில எத்துப்படல.. 


(அவங்களின் பக்த கோடிகள் அவங்ககிட்ட சொல்லி நவீன கவிதையையாவது

ரிலீஸ் பண்ணகூடாதா... பிளீஸ்.. )


🤪🤪

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்