பூனைக்க(வி)தை - சிவசேகரன்

 //

தினமும்

கோப்பை உரசும் சத்தம் கேட்டு

ஓடி வந்து

படியில் நின்றபடி

மியாவ் மியாவ் என்று

தன் வரவை சொல்லிக் கொண்டிருக்கும்

பூனைக்கு

எடுத்து வைத்த ஒரு சோற்றை

அதன் கிண்ணத்தில் வைக்கிறாள் அஷிரா


இரண்டுதரம் தின்றுவிட்டு அஷிராவை பார்த்தபடியே

மீண்டும் கத்துகிரது


மியாவ்

மியாவ்


மறைவிலிருந்து

ஒடிவருகிறது இன்னொன்று


காலியான கிண்ணத்தை

நக்கிவிட்டு

மீண்டும் கத்துகிறது


வியந்தேன்


வயிற்றை நிரப்பிய

அஷிராவின் கருணைக்கு

பூனையின் நன்றி

மூன்று மியாவ்


மியாவ்

மியாவ்

மியாவ்

00


-2021.11.08

09.30pm



(எங்கள் வீட்டு பூனை)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்