கவிதை - சிவசேகரன்

 


//

காலத்தின் கரங்களில்

இரண்டு கிண்ணங்கள்

ஒன்றில் கருணை ரசம்

மற்றொன்றில் துரோக மது


கருணை கிட்டாதவர்கள்

நேசத்திலிருந்து பிரிகிறார்கள்

புன்னகையோடு


கருணையுள்ளவர்கள்

தங்கள் துரோகிகளை

ஞாபங்களால் தண்டிக்கிறார்கள்


தீரா ஞாபக வலியுடன்

காலத்திடம் சரணடைகிறார்கள்

துரோகிகள்


அவர்களின் முன்னால் நீள்கிறது

காலத்தின் நெடுகரங்கள்

00


10.30pm

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

இலக்கியமும் அதிகாரமும் - சிவசேகரன்