❣️ எனக்கொரு பார்ட்னர் தேவை ❣️
(Not a joke; it's a open talk 😊) 01- பிறந்த நாளுக்கு (17.05) வாழ்த்திய அன்பர்களில் (என்னை நெருக்கமாக அறிந்தவர்கள்) பாதிப்பேர்; >திருமணம் எப்போது? >ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? >சீக்கிரமா நேர காலத்தில பண்ணிக்கொள். >எப்பவும் தனிமையிலே இருக்காதே! அம்மா பாவம்; அவவுக்காக பண்ணிக்கொள். >30 தாண்டியாகி விட்டது; இன்னும் என்னடா செய்யிறாய்? >பல காதலிகள் இருந்தார்களாம்; அதில் ஒன்றை கட்டித் தொலைத்திருக்கலாம்" > பாதியை கடந்து விட்டாய்; மீதிப் பாதியை கடந்து விட உனக்கொரு பார்ட்னர் தேவை. >பேஸ் புக் ல சும்மா எழுதிக்கொண்டு இருக்காத; வாழ்க்கைய அனுபவி என்றெல்லாம் அக்கறையோடும்; செல்ல கோபமும் கொண்டு பேசினார்கள். அவர்கள் எல்லோரின் வார்த்தைகளும் உயிர்ப்பான வார்த்தைகள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொண்ட பதில்களின் "சாரம்" ஒன்றுதான். அது "என் இருப்பு நிலை; நான் கொண்ட வாழ்வுச் சித்தாந்தம். 00 02- காதல் என்னிடம் அப்படியேதான் இருக்கிறது. காதலிகள் இப்போது இல்லை. என் அதிகப் பிரசங்கங்கள் அவர்களிடமிருந்து என்னை தள்ளி வைத்துவிட்டது. இங்குதான் நான் கூறிய "என் இரு...