❣️ எனக்கொரு பார்ட்னர் தேவை ❣️
(Not a joke; it's a open talk 😊)
01-
பிறந்த நாளுக்கு (17.05) வாழ்த்திய அன்பர்களில் (என்னை நெருக்கமாக அறிந்தவர்கள்) பாதிப்பேர்;
>திருமணம் எப்போது?
>ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை?
>சீக்கிரமா நேர காலத்தில பண்ணிக்கொள்.
>எப்பவும் தனிமையிலே இருக்காதே!
அம்மா பாவம்; அவவுக்காக பண்ணிக்கொள்.
>30 தாண்டியாகி விட்டது; இன்னும் என்னடா செய்யிறாய்?
>பல காதலிகள் இருந்தார்களாம்; அதில் ஒன்றை கட்டித் தொலைத்திருக்கலாம்"
> பாதியை கடந்து விட்டாய்; மீதிப் பாதியை கடந்து விட உனக்கொரு பார்ட்னர் தேவை.
>பேஸ் புக் ல சும்மா எழுதிக்கொண்டு இருக்காத; வாழ்க்கைய அனுபவி
என்றெல்லாம் அக்கறையோடும்; செல்ல கோபமும் கொண்டு பேசினார்கள்.
அவர்கள் எல்லோரின் வார்த்தைகளும் உயிர்ப்பான வார்த்தைகள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொண்ட பதில்களின் "சாரம்" ஒன்றுதான். அது "என் இருப்பு நிலை; நான் கொண்ட வாழ்வுச் சித்தாந்தம்.
00
02-
காதல் என்னிடம் அப்படியேதான் இருக்கிறது. காதலிகள் இப்போது இல்லை. என் அதிகப் பிரசங்கங்கள் அவர்களிடமிருந்து என்னை தள்ளி வைத்துவிட்டது. இங்குதான் நான் கூறிய "என் இருப்பு நிலைச் சித்தாந்தம் வேலை செய்கிறது.
அதென்ன இருப்பு நிலை சித்தாந்தம்"
முதலாவது;
நான் இலக்கில்லாத ஒரு விசித்திரப் பறவை. இந்த குணாம்சம் யாருக்கெல்லாம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. வாழ்வைப் பற்றியோ; அதற்கான பணம் பற்றியோ நான் எப்போதும் அலட்டிக் கொள்வதில்லை. மாதத்தில் அதிகமாக 20 நாட்கள் வேலைகள் செய்கிறேன் (சிலவேளை 15 நாட்கள்). இன்னதென்று இல்லாமல் கிடைக்கும் வேலைகள் யாவையும் செய்வேன். பகுதி நேரம் டியூசன் எடுக்கிறேன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்,வாசிக்கிறேன், ஊர் சுற்றுகிறேன். பட்ப்படிப்பை மேற்கொள்கிறேன். என் சம்பாத்தியத்திற்கு ஏற்ப வாழ்வை; அதன் அற்புதங்களை அனுபவிக்கிறேன்.
இரண்டாவது;
முன்னொரு முறை எழுதியது போல; சாதியும்,மதமும், பணமும்,பதவியும், அந்தஸ்தும் பீடித்த நேசங்களை நான் அறவே வெறுக்கிறேன். அதனால் காதல் இன்னமும் கை கூடாமல் இருக்கிறது.
பணமும்,பதவியும்,ஆடம்பரமும்,அழகும்வாழ்விற்கான கருப்பொருட்கள் அல்ல. வாழ்வின் ஒரு பகுதியை முழுமை செய்பவை இவை. ஆனால் நீடித்த நேசம் என்பது வாழ்வு மரத்தின் அடி வேர். பக்க வேர்கள் பல காரணங்களால் இல்லாமல் போகும். வேலிக்குள்/மதிலுக்குள்/வீட்டுக்குள்/முற்றத்தில் எங்கு வந்தாலும் பக்க வேர்கள் அறுக்கப்படும். ஆனாலும் இன்னொரு புது வேரை; கிளை வேரை மரம் உயிர்ப்பிக்கும்;அது இயல்பே.
பணமும் பதவியும் போகும் வரும். அதற்கு அடிவேர் நிற்க வேண்டும். அது உயிர் வேர்; இறுதிக் கணம் வரை தாங்கும் வேர். அந்த வேருள்ள; அந்த வேருக்கு நீர் பாய்ச்சும் ஒரு கருணையை தேடிக் கொள்ளுங்கள்; நானும் அதையே தேடுகிறேன்.
என் அத்தனை அற்பத் தனங்களையும் கேட்ட பின்னும் "பரவாயில்லை" என்று அணைக்கின்ற கரங்களை தேடுகிறேன்; துணைவியை தேடுகிறேன்.
00
03-
வீட்டில் ஏற்பாடுகள் நடக்கும் போது முகநூல் வழி பெண் தேடி தருகிறார்களாம்.அதற்கு விபரம் கேட்டார்களாம். என்ன விபரம் கொடுக்க என்று கேட்க; நானும் என் உண்மைச் சித்தாந்தங்களை சொன்னேன். கொண்டு போன தரகர் இன்னும் வரவில்லை. முகநூலில் பிரபலமான ஒரு தரகர் நிலையம் அது)
முகநூல் வழியில் துணை தேடும் தொழினுட்ப உலகில் இருக்கும் அதிசய தலைமுறை நாங்கள். அது ஒருவகையில் சுதந்திரமானதும்; சிறந்ததாக இருந்தாலும், பல பொய் மனங்களை இணைக்கின்ற நிலையையும் காண முடிகிறது.
பொய் என்பதே; திருமணத்தின் அடியாக நினைக்கும் மனோ நிலையில் பலர் இருக்க காண்கிறேன். என்ன ஒரு அபத்த மணவாழ்வுச் சூழலுக்குள் சிக்கிப் போயிருக்கிறோம் பாருங்கள்.
பெற்றோர்கள் மத்தியில் தம் பிள்ளைகளை சிறந்த வாழ்வு வாழ வைப்பது பணம் மட்டுமே என்ற எண்ணம் மேலோங்கி விட்டது; பெற்றார் பலரும் நல்வாழ்வு பற்றிய கற்பிதங்களை தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்களும் வெளிநாடு,பணம்,பதவி இவை மட்டுமே வாழ்வு என்று முடிவாக இருக்கிறார்கள்.
பணம் பதவில் இல்லாமல் வாழ்வே இல்லை என்ற ஒரு சமூகத்தை வளர்த்து விட்டோம். இந்த அபத்தச் சூழல் தமிழ்ச் சமூகத்தில் அதிகம் என்கிறேன். நேசத்தை பற்றியோ உணமையைப் பற்றியோ யாரும் அக்கறை கொள்வதாக இல்லை. புதிய சோடிகள் பலரும் இன்று கணவன் மனைவியாகக் நாடகம் நடிக்கிறார்கள். இந்த அபத்த திருமண வாழ்விலிருந்து நான் விடுபட்டு வாழ நினைக்கிறேன். திருமண வாழ்வு சந்தான விருத்தி மட்டுமே என்று சில மூட கூட்டம் திரிகிறது.
"பெண்கள் குழந்தை பெறும் இயந்திரங்கள். ஆண்கள் பணம் சேர்க்கும் இயந்திரங்கள்" அவ்வளவே இவர்களின் வாழ்வு பற்றிய எண்ணம். இதையெல்லாம் தாண்டிய இன்னொரு அற்புதம் வாழ்வு என்று நான் நினைக்கிறேன். அந்த அற்புதங்களை நிகழ்த்தும் மனம் எந்த மூலையில் இருந்தாவது என்னை தானாக தேடி வரட்டும். அல்லது என் போன்ற சித்தாந்தம் கொண்ட ஒருவரை காலம் எனக்கு காட்டிக் கொடுக்கட்டும்!
❣️
(I'm waiting for you partner! 😜😜)


கருத்துகள்
கருத்துரையிடுக