மட்டைவேலிக்கு தாவும் மனசு - அலெக்ஸ்பரந்தாமன்
"மட்டைவேலிக்குத் தாவும் மனசு" """""""""""""""""""""""""""""" """""""""""""""""""""""""""""" """ எஸ்.சிவசேகரனின் கவிதைத் தொகுப்புக் குறித்து ஒரு கண்ணோட்டம்! " கவிதை என்பது ஆற்றல் வாய்ந்த உணர்ச்சி களின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சி களின் கொப்பளிப்பு..." எனக் கூறுகிறார் வோர்ட்ஸ் வொர்த் எனும் ஆங்கிலக் கவிஞன். பலர் நிறையப் புத்தகங்கள் வாசித்தாலும், எழுது வதென்பது அவர்களுக்கு இலகுவாக அமைந்து விடுவதில்லை. காரணம் வோர்ட்ஸ் வொர்த் அவர்கள் கூறுவது போன்று, சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்ப ளிப்பானது கண்முன்னே நடைபெறும் ரணகள நிகழ்வுகளை உள்வாங்கி, எழுத்துகளாக வெளிப் படுத...