என்ர கத - 07


எஸ்.சிவசேகரன் 
#
சோறுகுடுப்பு
#

இந்தக்காலத்தில் நிறைய கலியாணங்கள் லச்சங்கள் செலவில, சிலவேளை கோடி செலவிலயும் நடந்து முடியும். அப்பிடி நடந்து முடிஞ்ச கலியாணங்களிலயும் ஒரு சிறப்பு சம்பவம் நடக்கும். அதென்னண்டா அரைவாசி டைவேர்ஸ் கேசுக்கு போய்டும். அவ்வளவு முன்னேறிட்டம் நாங்கள். ஆனாப்பாருங்கோ எங்கட அய்யா-அம்மா காலம் ஒரு பொற்காலம். அந்தக்கால ஆக்களுக்கு ஆடம்பரமும் தெரியா; பொலிஸ்ரேசனும் தெரியா; டைவேர்ஸ் எண்டு ஒண்டு இருக்கிறதும் தெரியா.

சரி விசயமென்னெண்டா, "சோறுகுடுப்பிச்சது" தான.. அந்தக்காலத்தில அநேகமான ஏற்பாட்டு கலியாணங்களில நடக்கிற ஒரே ஒரு சடங்கு இதுதான். (இப்பவும் அரிதாக நடக்குது) அதாவது பொம்பிள வீட்டில ரெண்டு மூண்டு கறி சமச்சு, பெரிய ஆக்கள் முன்னிலையில ஆம்பிளைக்கு சாப்பாடு குடுபடும். இல்ல, ஆளாளுக்கு மாறி தீத்துப்படும். ( கட்டிக்க சம்மத்மெண்டால் சோறு தீத்து எண்ட தோரண்யில எல்லா பெரிசும் நிக்கும்).

இந்த சோறு தீத்தல் நடந்தாலே கலியாணம் முடிஞ்சுது. பிறகென்ன சொந்தமெல்லாம் மூக்குமுட்ட சாப்பிட்டு அவரவர் வீட்டுக்கு போக வேண்டியதான். இரவு ரிசெப்சனும் இல்ல. வீடியோ மிக்சிங்கும் இல்ல. அடுத்த நாளோ/ கொஞ்ச நாளிலயோ டவுனில இருக்கிற ரயித்தார் (ரிஜிஸ்டர்- இப்பவும் ஊருக்குள்ள ரயித்தார் எண்டுதான் சொல்லுவினம்) வீட்ட போய் கலியாண சேட்டிவிக்கற் எழுதுவினம். இவ்வளவுதானுங்கோ கலியாணம்.
ஆனால், சம்மாட்டி வீட்டுக்கலியாணங்கள் கொஞ்சம் தடல்புடலா நடக்குமாம். பெற்றோல்மச் வாடகைக்கு எடுத்து இரவு கொண்டாட்டமும் நடக்குமாம். 

இப்பிடி சிம்பிளா–சிறப்பா கலியாணம் முடிச்ச அய்யா-அம்மா, கொஞ்ச நாளில தனிக்குடித்தனம் போயிட்டினம். பிறகு தான் அய்யான்ர சுயரூபம் வெளிப்பட்டதா அம்மா சொல்லுவா. 

தனிக்காட்டு ராஜா போல அய்யா நடக்க வெளிக்கிட்டார். ஏனெண்டால் அம்மாவோ- உயிலடியாரோ படிப்பு மட்டம் சீரோ தான். அய்யா கொஞ்சம் படிச்சவர். கனக்கவில்ல எட்டாம் வகுப்பு. சாதுரியமான அறிவாளி. இதனால அய்யாவுக்கும் ஒரு ஈகோ வந்திட்டுது.

அந்த சுயரூப-வீராப்புகளை நாளைக்கு சொல்லுறன்..
00

16.04.2020
06.35am

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

இலக்கியமும் அதிகாரமும் - சிவசேகரன்