என்ர கத - 03
சாதிக்கத
#
நான் இந்த விசயத்த சொல்லுறதால
என்னை சாதிவெறிப்பிடிச்சவன் எண்டு நினைப்பவர்களாக நீங்கள் இருந்தால் இதை படிக்கதயுங்கோ..
எந்த உறவாடல்/உரையாடல்களிலயுமோ நான் சாதி எண்டு, எல்லாரும் வெளியால இல்லயெண்டு சொல்லிக்கொண்டு உள்ளூர தூக்கிக்கொண்டு அலையிற விசயத்த எப்பவும் தூக்க நினச்சதும் கிடயாது; கேட்பவனுக்கு என்ர சாதிய பெருமயா சொல்ல வெக்கப்பட்டதும் கிடயாது.
எனக்கு எல்லாரும் நண்பர்கள்தான். அது என்னை அறிந்தவர்களுக்கு நன்றாய் தெரியும்.
ஆனாலும் எங்கட ஊரில இருக்கிற ஒற்றை சாதிப் பிரிவுகள நான் எப்பவும் நினச்சுக்கொண்டே இருப்பன். ஏனெண்டா எனக்கு அது ஒரு பழமை வரலாறின்ர/ ஆதி இருப்பின்ர அடையாளமா தெரியுது.
இலங்கயில நாகர்கள் வாழ்ந்த இடமெண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற எங்கட ஊர், இப்பவும் அதுக்கு சாட்சியா, நாகர்களின் அடித்தோன்றலோட இருக்கெண்டு பெரும அது;
எல்லாம் மாறிக்கொண்டுவாற இந்தக்காலத்திலயும் பல சடங்கு சம்பிரதாயங்கள் அப்பிடியே இருக்கு எண்ட பெரும அது; உலகம் எங்கயோ போனாலும் உலகத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளாம அதே குணநலன்களொட ஒரு கூட்டம் இருக்கெண்ட பெரும அது.
சரி விசயத்துக்கு வாறன்.
கரையார்கள் மட்டுமே இருக்கிற எங்கட ஊர்ல,
#வடுகர்
#சிவியார்
#கோவியர்
#உயிலடியார்
#சாயத்தெருவார் எண்டு ஏராளம் பிரிவுகள் இப்பவும் இருக்கு. இந்தப்பிரிவுகளின்ர சிறப்பு, ஒவ்வொரு எல்லைப்படுத்தலோடு இருக்கிற இவயள்; தங்களுக்குள்ளான உறவு முறைகளிலயும், கோவில் வழிபாட்டு முறைகளிலயும் தனித்துவமானவயா இருக்கிறதுதான்.
( வெளியிடங்களில வேற வேற சாதிக்காரன் நான் பெரிசு நீ பெரிசு எண்டு முக்குவாராப்பட்ட காலத்தில, ஒரு சாதிக்காரனே தனக்குள்ள முக்குவாரப்படுகிறதும், பெரும பீத்திக்கொள்ளுறதும் அதிசயம் தான..? )
இப்பிடி பிரிஞ்சு இருக்கிற எல்லாரயும் ஒண்டாகிற ஒரு விசயமிருக்கு. அது எங்கட ஊரின்ர இன்னொரு அதிசயம்.
அது என்னெண்டும் நான் என்னபிரிவெண்டும் நாளைக்கு சொல்லுறன்
000
(என்ர கத தொடரும்..)

கருத்துகள்
கருத்துரையிடுக