லாக்டவ்ண் - 05




முத்த இரவுகள்
###########

எனது
மூவாயிரத்து எண்ணூற்றியிருபத்தைந்து
தனித்த இரவுகள் தொலைந்து வந்த
புதிய இரவுகளை
முத்தங்களின் இரவுகளாக
கொண்டாடத்தொடங்கியிருக்கிறேன்

இன்றுதான்
முத்த முதலிரவு..

முத்தம் என்பது
காமத்தின் செல்களிலிருந்து
கழியும் அழுக்கென்ற
யாரோ ஒரு மூடனின் கல்லறை எழுப்பி
முத்தங்களின் சூட்சுமங்களை
கேட்கச் சொன்னால்
என்ன செய்வீர்கள் நீங்கள்..?

நான்
தனிமையை எனக்கு அறுதியிட்ட
அநித்தயங்களின்
இரகசிய அறைகளிலிருந்து
மெதுவாக வெளியேறிக்கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து வழியும்
பெரு நேசத்தின் முத்தங்களை
கைகளில் ஏந்தியபடி...

நீங்கள்..??

00
எஸ்.சிவசேகரன்
11.20pm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்