என்ர கத - 04
நாகையா
#
நான் நேற்று சொன்ன கதயில, எல்லாரையும் ஒண்டு சேர்க்கிற அந்த அதிசயம் எங்கட "நாகையா" தான்.
நாகர்கோவிலுக்குள்ள நுழையிற வாசலில காவலுக்கு இருக்கிறவர்தான் இந்த நாகையா. வருசாவருசம் இவருக்கு நடக்கிற திருவிழாவில தரவயார் எடுத்துச்செய்யிற திருவிழா போக, கடசிக்கு முதல் நாள் எங்கட திருவிழா. அதுதான் எங்கட சனத்தின்ர ஆகச்சிறந்த கொண்டாட்ட நாள். கப்பல் திருவிழாவும் தீர்த்த திருவிழாவும் நடக்கிற நாளில ஊரில் உள்ள குஞ்சு, குறுமான் எல்லாம் தொண்ணூற்றொன்பது வீதமும் கோவில்லதான் நிக்கும்.
இங்க மட்டுந்தான் எந்த பிரிவுமில்லாம ஒண்டா இருப்பினம். சோறு, புக்கை எண்டு மடங்களில செய்து சாப்பிட்டு நாள் போகும்.
இந்த திருவிழா நாளெல்லாம் பொடியள்,பொட்டயள்,பழசு,தினுசெல்லாம் பக்திப்பழங்களாவும், மேக்கப்போடயும் திரியிறத பாத்து ஒவ்வொரு வருசமும் சிரிப்பம். இப்ப நாங்கள் 20 வருசமா ஊரில இல்லாட்டியும் ஒவ்வொரு வருசமும் நாகையாட்ட போய்டுவம். அப்ப எல்லா சொந்தபந்தங்களோடயும் இருந்து கதையளக்கிறது ஒரு தனிச்சுகம்.
இப்பிடியான ஒரு ஊரில ஒரு பரம்பரையின்ர மூத்த வாரிசு என்ர அம்மா. அந்த பரம்பரை #உயிலடியில இருந்த கோவிய, வடுகப் பரம்பரை. இந்த பரம்பரைக்கு சேர்ந்த ஆள்தான் இந்த எஸ்.சிவசேகரன் என்கிற சிவமயம்.
என்ன சிவமயம் எண்டு புதுப்பேர் சொல்லுறான் எண்டுதான யோசிகிறியள். அதென்ர வீட்டுப்பேர். எங்கட வீட்டில இருக்கிற பேருக்கெல்லாம் ஒரு கத இருக்கு. அதை நாளைக்கு சொல்லுறன்..
000
07.05am

கருத்துகள்
கருத்துரையிடுக