என்ர கத - 09
எஸ்.சிவசேகரன்
#
மணியண்ண
#
என்னதான் அய்யா அம்மாவுக்கு அடி அய்க்கினை செய்தாலும், அம்மாவையோ எங்களயோ தான் போகுமட்டும் யார்கிட்டயும் கையேந்த விடயில்ல; ஒரு ரூபாக் கடனும் விட்டுப்போகயில்ல. இப்பவும் நாங்க அஞ்சு பேரும் யார்கிட்டயும் கடன் வாங்கினதுமில்ல; யார்கிட்டயும் போய் உதவிக்கு நிண்டதுமில்ல.
அடிச்சே வளத்திருந்தாலும், நல்ல படியாத்தான் வளத்தார். அம்மாக்கோ எங்களுக்கோ அடிச்சுப்போட்டு வந்து நிண்டு தடவி விடுறதும்; தடிச்ச இடத்துகு தைலம்/ நோவெண்ண பூசுறது இப்படி இரக்கமும் உள்ள ஆள். அதனால நான் அவர்கிட்ட இருந்து நாங்க நிறைய கற்றுக்கொண்டன்.
"ஒரு மகன், சகோதரன், தகப்பன், புருசன் எப்பிடியெல்லாம் நடக்கனும்; நடக்க கூடாது எண்டு முழுசா படிச்சது அய்யாட்ட இருந்திதான். சரி விசயத்துக்கு வாறன்.
நான் முதல் ஒரு கதயில சொன்னமாதிரி அந்தக்காலத்தில எல்லாத் தொழில்காரரும் ஊரூரா போய்த்தான் தொழில் செய்தவயள். அப்பிடி எங்கட ஊருக்கு வந்தவர்தான் இந்த மணியம். அவர் ஒரு வண்ணார். காலப்போக்கில கலியாணம் கட்டிக்கொண்டு எங்கட ஊரிலயே வந்து குடியேறிட்டார். அதோட ஆள் ஒரு சோக்கான "மெக்கானிக்" எலெக்ரோனிக்கில இருந்து எலெக்ரிக் வரைக்கும் அத்துப்படியான ஆள்.
எங்கட வீட்டில இருந்து சரியா 100மீட்டர் தூரத்திலதான் அந்த வீடு. அதுதான் மணியண்ணயின்ர வீடு. என்னதான் அவர் வண்ணாரா இருந்தாலும் எங்கட ஊரில; எங்கட சாமி அறை வரைக்கும் வாற உரிமை உள்ள வெளி ஆள் அவர் ஒருத்தர்தான். அதோட ஊரில இருக்கிற பெரிய புள்ளியளில ஆளும் ஒருத்தர். ஊரில நடக்கிற சாமத்திய வீடு, காது குத்து, கலியாணம், செத்தவீடு எல்லாத்துக்கும் வெள்ள கட்டுறது அவர் வேலை எண்டாலும், எங்கட குலத்தில, வருசத்தில முதல் தொழில் செய்து வாற "நாள் வலை" நாளில் நடக்கிற "மீன் பெருக்கு" சடங்கிலயும் (இப்பவரை) மணியண்ண முன்னுக்கு நிப்பரெண்டா பாருங்கோவன். இன்னொரு விசயத்த விட்டுட்டன்; ஊருக்குள்ள சில முடிவுகள் எடுக்கிறதுக்கும் மணியண்ணயின்ர பங்கிருக்கும்.
இப்படி ஊரோட அந்நியோன்னியமான இந்த மணியண்ணைக்குத்தான் என்ர அய்யா கடசிவரை பணிஞ்சதும்; காது குடுத்ததும். அய்யா சாகிற 2015 மார்கழிக்கு முதல் ஒரு வருசத்துக்கு மேல எங்களோட பேசிறதில்ல. அவரோட வீராப்பு உச்சத்துக்கு போய்ட்டுது. அதனால தானே தனியா சமச்சு சாப்பிட்டார்.
ஆனாலும் மணியண்ணய சந்திக்காம விடயில்ல.
இப்பிடியான ஒரு வீராப்பு நாயகனோட நீங்க இருந்திருந்தா பள்ளிக்கூடத்துக்கு கூட போயிருப்பியளோ தெரியல. அப்பிடி அடிச்சும் பயமுறுத்தியும் தான் எங்கள வளத்தார். மூத்தண்ண பயத்தில படிப்ப விட்டிருந்தாலும், ஆனாலும் நாங்கள் எல்லாரும் கொஞ்சமாவது படிச்சம்.
(இப்பிடியான ஒரு வீராப்பு நாயகனா உங்க அப்பா/அய்யா?)
சரி, இப்பிடியான அய்யாவ சமாளிச்சு இந்தக்கதயள எல்லாம் எனக்கு சொல்லுற ஒரு வலிய சீவனப்பற்றி உங்களுக்கு சொல்லாம விட்டால் "என்ர கத" நல்லாவா இருக்கும்.
அதுதான்; என்ர அம்மா
அவாவ பற்றி நாளைக்கு சொல்லுறன்.
00
05.45am
18.04.2020

கருத்துகள்
கருத்துரையிடுக