லாக்டவுண் - 06
சனியனை கொழுவுதல் அல்லது கைகளை கழுவுதல்
###
மனிதர்கள் பூட்டப்பட்ட
நகரத்து வீடொன்றின் வாசலில்
நலம்கேட்பதற்காய் நிற்கிறேன்
அரைமுகத்தை மறைத்தபடி..
நில்லுங்கள்...
கால்கள் கழுவிவிட்டீர்களா?
"ம்ம்"
கைகள்?
"ஆம்"
முகம்??
"ஆம்"
சரி வாருங்கள் உள்ளே
எதையும் தொடாதீர்கள்
இது சனியன் வாழும் உலகம்
எதையும் சொல்லாதீர்கள்
இது சனியன் வாழும் உலகம்
எதையும் கேட்காதீர்கள்
இது சனியன் வாழும் உலகம்
எங்கும் செல்லாதீர்கள்
இது சனியன் வாழும் உலகம்
"சரி போய்வாருங்கள்"
சனியன் வாழும்
நரகம் கடந்து வந்து
கைகளையும்
தோல் உரிந்து வடியும் குருதியையும்
சேர்த்து
மீண்டும் மீண்டும் நான்
கழுவிக்கொண்டே இருக்க
எதிர் வீட்டிலிருந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறது
"இது சனியன் வாழும் உலகம்"
"இது சனியன் வாழும் உலகம்"
00
எஸ்.சிவசேகரன்
18.03.2020
08.15am

சிறந்த படைப்பு
பதிலளிநீக்குவாழ்த்துகள்
மிக்க நன்றி; தொடர்ந்து பயணிப்போம்..
நீக்கு