கேள்வி-பதில் 1
எழுத்தாளர் த.அஜந்தகுமாரின் முகநூல் பக்க கேள்விகளுக்கான என் பதில்கள்
#
எஸ்.சிவசேகரன்
#
கேள்வு - 01.
படைப்புகள் தோன்றுகிற அளவுக்கு விமர்சனங்கள் தோன்றுகின்றனவா?
#
(ஈழத்து இலக்கியப்போக்கினை முன்வைத்து; நான் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தருகிறேன்)
பதில் -
ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்கு கைலாசபதி, சிவத்தம்பி, தளையசிங்கம் என (இன்னும் சிலர் இருக்க கூடும்) சிலரின் மறைவின் பின்னர் வெகுவாக அருகிவிட்டதாகவே நான் குறிப்பிடுவேன்.
தமிழகத்து எழுத்தாளர்களே கொண்டாடிய/ காத்துக்கிடந்த ஈழ விமர்சனப்போக்கின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை; சில நிகழ்கால இலக்கிய மேடைகளில் இடம்பெறும் #சுயதம்பட்ட உரைகள் மூலமும், எழுத்தாளனின் உச்சியை குளிர்விக்கும் உரைகள் மூலமும் நான் உணர்ந்து கொண்டேன்.
(அதிகமாக எழுத்தாளனை குளிர்விக்கும் இந்த உரைகளை "தரமான விமர்சனம்" என்ற(ப)வர்களும் உண்டு.)
கைலாசபதி, சிவத்தம்பி, தளையசிங்கம் முதலானோர் வளர்த்துப்போன விமர்சனப்போக்குக்கு மு.பொ, சி.சிவசேகரம், நுஃமான், செ.யோகராசா, சபா.ஜெயராசா, துரை மனோகரன் முதலானவர்கள் தொடர்ந்து நீரூற்றியர்கள் என்பதை நினைவிருத்துகிறென்.
ஆனாலும் இவர்களில் நிகழ்காலத்தில்; இவர்களில் மு.பொ, யோகராசா, சபா.ஜெயராசா முதலானவர்களோடு;
அ.யேசுராசா, செல்வமனோகரன், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணன் முதலான விமர்சகர்கள்(?) அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருந்தாலும், வரண்முறையாக ஒரு விமர்சனப்போக்கு ஈழத்தில் இப்போது இல்லையென்றுதான் சொல்வேன்.
ஏனெனில்,
போருக்குப்பின்னர் சடுதியாக உயர்ந்துள்ள படைப்புகளின் எண்ணிக்கைக்கும்,
விமர்சனங்கள் செய்யப்படுகின்ற/உட்படுத்தப்படுகின்ற படைப்புகளின் எண்ணிக்கைக்கும் பாரிய இடைவெளி காணப்படுவது வெளிப்படை..
அதற்குரிய சில காரணிகளாக நான் உணர்ந்து கொண்டவை
1- விமர்சனங்களை புதியவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு
2- பயிரையே மேயும் வேலி விமர்சனங்கள் எனும் குற்றச்சாட்டு
3- படைப்பாளிகளையும் படைப்புகளையும் ஏற்றுக்கொள்ளா/புறமொதுக்கும் செயற்பாடு
போரிலக்கியமாக (?) கொள்ளப்பட்டு வெளிவருகின்ற படைப்புகள் மீது மட்டுமே அதிகமாக செய்யப்படுகின்ற விமர்சனங்களும், முன்னிலைப்படுத்தல்களும் ஏனைய புதியவர்கள் மீதும், ஈழ- புலம்பெயரிகளின் படைப்புகளின் மீதும் செய்யப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு, தற்போதைய விமர்சகர்களில் (?) பரவலாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு,
ஒரு நேரியதான விமர்சனப்போக்கில்லாத இந்த சந்தர்ப்பத்தில்
இந்த கேள்விக்கு எனது பதில் "இல்லை" என்பதே.
00
(அடுத்த கேள்விக்கு பதில் இன்னும் சற்று நேரத்தில்)

கேள்வி-பதில் தொகுப்பு
பதிலளிநீக்குஅருமையான பதிவு