என்ர கதை - 01
என்ர கத -
#
எஸ்.சிவசேகரன்
#
எழுத்தாள, வாசக நண்பர்கள் என்னிடம் அதிகமா கேட்ட கேள்வி
" நீங்கள் என்ன செய்யிறியள்? "
நான் சொல்லும் பதில்;
"கூலி வேலை செய்யிறன்"
அதன்பிறகு என்ன சொல்லிருப்பினம் என்டு நீங்க ஊகித்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த ஊரடங்கு அமுலாகும் வரை
மேசன், பெயிண்டிங், கதியால் வெட்டு, புகையிலை மேடை, கல்லுடைப்பு, துப்பரவு, உட்பட எல்லா கூலிவேலைகளையும் செய்தவன்; (செய்யப்போகிறவன்).
அதனால சிக்கனத்தையும், பசியையும், வறுமையையும் நன்குணர்ந்தவன்.
இந்த வேலைகளை செய்துகொண்டு வாசிப்பிலயும்ம் எழுத்திலயும் ஈடுபட்டதாலதான், எல்லா பெரிய எழுத்துப்புலியளும் எழுத,வாசிக்க முடியல எண்டு புலம்பிக்கொண்டிருக்கிற
இந்த இடர்காலத்திலும் என்னால வாழ்வை சமாளிக்க முடிகிறது; தொடர்ந்தும் எழுதவும் வாசிக்கவும் முடியுது.
நான் பட்டம், பதவி வந்த பின் எழுத வந்தவனல்ல, பதினாறு வயதில் எனது கூலி வேலையும் வாசிப்பும் தொடங்கியது. பதினெட்டு வயதிலேயே எழுத்துக்கு வந்துவிட்டேன்.. அதனால்தான் சொரணைகெட்ட அரசியல் வாதிகளுக்கும்,
பசிக்காய் திருடிய சுமனசேனவுக்கும் என்னால் எழுதமுடிகிறது.
ஜெயகாந்தனின் ஸ்டைலில் சொல்வதானால்,
"எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்"
00
(என்ர கத தொடரும்...)

கருத்துகள்
கருத்துரையிடுக