என்ர கத - 02

#
ஊர்
#

இலக்கிய கூட்டங்களில என்னோட அறிமுகமாகிற நண்பர்கள் ஆச்சரியமா கேக்கிற ஒரு விசயம் என் ஊரைப்பற்றித்தான்.
"அந்த ஊரில இருந்தா வாறியள்? "

நான் எழுத்துக்கு வந்ததில இருந்து,
அடிக்கடி நான் நினைச்சுக்கொள்ளுற ஒரு விசயம்; என்ர பிறந்த ஊரப்பற்றி ஒரு கத எழுதவேணுமெண்டது. (கண்டிப்பா பெருங்கதை ஒண்டு எழுதுவன்)

பருத்தித்துறையில் இருந்து மருதங்கேணி போற வழியில இருக்கிற "நாகர்கோவில்" தான் நான் பிறந்த ஊர். எட்டு வயதுமட்டும் அள்ளிக்கொட்டி, அழைஞ்சு, அலைஞ்சு திரிஞ்ச மண். 

நாகர்கோவில் - தரவை எண்ட பகுதியில வெள்ளாம செய்யிறவை இருந்தாலும்,
எங்கட ஊரில, எல்லாருக்கும் கடற்தொழில் தான். அந்தக்காலத்தில சாம்பர், சிவஞானம் சம்மாட்டிமார் கரவலை வச்சிருந்த பெரிய புள்ளியள். " தம்பி, கனக்க இளம்பொடியள் அவயளோடதான் சம்பளவலைக்கு நிண்டுதான் உழச்சவங்கள்" எண்டு அம்மா சொல்லுவா.
(சம்பள வலையெண்டுறது முற்பணமா காசு வாங்கிக்கொண்டு, சம்மாட்டிக்கு நாளெல்லாம் கரைவலை இழுக்கிறது. கிழமைக்கு கிழமை கணக்கு பார்க்கும் போது வரும் பங்கு காசில் பெருமளவு/ முழுவதும் முற்பணத்தில கழிப்பினம்)

சொந்தமா கட்டுமரம் வச்சிருந்த ஆக்கள் தூண்டி, சூடவலை, அறக்கொட்டி எண்டு செய்வினம். ஆனாலும் இந்த ஊர் வித்தியாசமெண்டு நான் சொன்னது என்னெண்டா இங்க எல்லோரும் #கரையார்
எண்டாலும் இவைக்குள்ளயும் சில பிரிவுகள் இருக்கு. அதுகள அம்மா சொல்லும்போது கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கன்.

அந்த ஆச்சரியம் இன்னமும் அப்படியே இருக்கிறது தான் நான் ஒரு "பெருங்கதை" எழுத வேணுமெண்டு நினக்க்கிறதுக்கான காரணம்..

(அந்த அதிசயத்த நாளைக்கு சொல்லுறன்)

00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்