மட்டைவேலிக்கு தாவும் மனசு - அலெக்ஸ்பரந்தாமன்


"மட்டைவேலிக்குத் தாவும் மனசு"
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எஸ்.சிவசேகரனின் கவிதைத் தொகுப்புக் குறித்து
ஒரு கண்ணோட்டம்!

   " கவிதை என்பது ஆற்றல் வாய்ந்த உணர்ச்சி
களின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற 
நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சி
களின் கொப்பளிப்பு..." எனக் கூறுகிறார் வோர்ட்ஸ்
வொர்த் எனும் ஆங்கிலக் கவிஞன்.
    பலர் நிறையப் புத்தகங்கள் வாசித்தாலும், எழுது
வதென்பது அவர்களுக்கு இலகுவாக அமைந்து விடுவதில்லை. காரணம் வோர்ட்ஸ் வொர்த் அவர்கள் கூறுவது போன்று, சலனமற்ற நெஞ்சின் 
அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்ப ளிப்பானது கண்முன்னே நடைபெறும் ரணகள நிகழ்வுகளை உள்வாங்கி, எழுத்துகளாக வெளிப்
படுத்துவது.
   இந்த வெளிப்படுத்தல்கள்... வெளிப்படுத்துபவ
னின் மொழிநடைக்கேற்ப வேறுபடுகிறது. தான் சொல்லவரும் விடயத்தை கவிஞன் வெளிப்படுத்
தியபின், அது வாசிக்கும் வாசகனைப் பொறுத்தே 
தரநிர்ணயம் செய்யப்படுகிறது. இத்தர நிர்ணயத்
துக்கப்பால், கவிஞன் தன்மனதில் உண்டாகும் 
உணர்ச்சிகளை கவிவடிவாக்கம் செய்கையில், 
சிலருக்கு; பலருக்குப் புரிந்தும் புரியாமலும் போய் விடுகிறது. புரிதல் கொண்ட கவிதைகள் பேசப்படு
கின்றன. புரியாதவை விவாதிக்கப்படுகின்றன.
அல்லது கால ஓட்டத்தோடு அடிபட்டுப் போகின்றன.
   சுருங்கக்கூறி வாசகர்களுக்கு விளங்க வைப்பது 
கவிதையின் ஒரு தனிப்பண்பு. இதற்கு சில கவிதைகள் விதிவிலக்காகவும் இருக்கின்றன. அவ் விதமே வாசகனுக்கு சுருங்கக்கூறி விளங்க வைக்
கும் ஒரு கவிதைத்தொகுப்பாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த எஸ். சிவசேகரன்  அவர்களின்
'மட்டைவேலிக்குத்தாவும் மனசு' விளங்குகிறது.
   இத்தொகுப்பினுள் மனித வாழ்வியலோடு பின்
னிப் பிணைந்த சம்பவங்கள் வெளிப்படுகின்றன. 
இதனுள் பலமும் உண்டு பலவீனமும் உண்டு. பலம் 
என்று சொல்லப்படும்போது, கவிஞரின் பார்வை
யில் ஓர்' உன்னிப்பு' இருப்பதை அவதானிக்க முடி
யும். அந்த உன்னிப்பின் நிமித்தம், அவர் தனக்குள்
கொதிநிலையடைகிறார். இக்கொதிநிலை காரண
மாக அவர் கவிதைகளை எழுத முனைந்துள்ளார்.
   அடுத்து, பலவீனம் என்று சொல்ல வரும்போது , 
புதுக்கவிதைக்கும் ஓர் உருவம் உண்டு. இந்த உரு
வத்தை உருவாக்கும்போது சொற்கள் இடறுப்
படாதவாறு கவனிக்க வேண்டும். இந்தக் கவனிப்பு
தவறின், படைப்பு பரிகசிப்புக்கு ஆளாகும்.
   சிவசேகரன் முகநூலில் எழுதும் 'குறும்பாக்கள்'
பாராட்டத்தக்கவை மட்டுமல்ல, விமர்சிக்கப்பட வேண்டியவையும் கூட. ஆனால், இத்தொகுப்பி
னுள் இருக்கும் சிலகவிதைகளின் மொழிநடை 
வெறும் வசனமாகவே அமைந்து விடுவதனால், 
வாசிக்கும்போது ஒரு தொய்வு ஏற்படுகிறது.
இந்தத் தொய்வானது ஆரம்பநிலையில் உள்ளவர்
களின் படைப்புகளில் இருப்பது சகஜமே என்பதால், இதனுள் நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டுவ
தோடு, கடந்து போய்விடலாம்.
   ஒரு கவிஞனுக்குரிய 'சிறுமை கண்டு பொங்கு தல்' இவருக்குள்ளும் இருப்பதை இத்தொகுப்பி
னுள் இருக்கும் சில கவிதைகள் வெளிப்படுத்து
கின்றன. உதாரணத்திற்கு 'தலைப்பில்லாக் கவிதைகள் 'எனும் தலைப்பில் உள்ள ஒரு கவிதை 
யைக்  கூறலாம். 
    மீன் தொட்டவனெல்லாம் 
    அபச்சாரியாம். 
    கோவில் குருக்கள் சொன்னார்...
    
    கருவறைக்குள் இருந்து சிரித்தது 
    மீன்களோடு உண்டு வாழ்ந்த  
    வெண்சங்கு!
    ••
   கவிஞர் சாதியத்துக்கு எதிராக குரல் கொடுப்ப தோடு, பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பக்கமும் 
நிற்பது தெளிவாகிறது. இந்த 'சிறுமை கண்டு பொங்குதல் ' ஒரு கவிஞனுக்குரிய கடமையும் கூட.
   இதுதவிர, 'வண்ணம் கலைத்த ஓவியங்கள் ' கவிதையில் விதவையான ஒரு பெண்ணுக்கு வாழ்
வளிக்காத உதவி செய்யாத  இந்தச் சமூகத்தைப் பார்த்து, முகத்தில் அறைவதுபோல் கவிதைவரி
களை இறுதியில் முடிக்கிறார்  இக்கவிஞர்.
       எத்தனை கதவுகளைத் தட்டியிருப்பாள் 
       அவள்.
       வாசல் கதவுகளினாலேயே 
       விரட்டியடிக்கப்பட்டவள்  அவள்.

       இப்பொழுது  அவள் 
       தட்டுவதை நிறுத்தி விட்டாள்...
       இப்போது நடுராத்திரிகளில் 
       அதிகமாய் தட்டப்படுகிறது 
       அவளின்  கொல்லைப்புறக்கதவு.
        ••
   இதேபோன்று சமூகத்தில் நிலவும் வர்க்கமுரணை
வெளிப்படுத்துகிறது' காணாமல்போன இரவுகள்'
எனும் கவிதை. தேர்தல் காலங்களில் நிகழும் சம்ப
வங்களை 'காய்ந்துபோன விரல்மை' கவிதையூடாக
அதன் நிதர்சனத்தை வெளிப்படுத்துகிறார் சிவசே கரன்.
   இத்தொகுப்புக் குறித்து 'என் இலக்கியப்பயணத்
தின் முதல் அடி' எனக்கூறும் சிவசேகரன், தனக்
கான மொழிநடையில் இன்னும் கவனம் செலுத்து
வது நன்று. குறிப்பாக, தான் சொல்லவரும் விடயத்
துள் ஒருசொல் பலதடவை வரிகளில் வருவது, வாசிக்கும்போது சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
    " காலமும் சூழலும் எனக்குத்தந்த அனுபவங் களின் பாதிப்பு  என்னையும் எழுத வைத்து விட்டது..." எனத்தான் எழுத வந்த காரணியைக் கூறும் இவர், தொடர்ந்தும் தனது அனுபவங்களின் 
பாதிப்புக்களைக் கவிவடிவில் தருவார்... என எதிர்
பார்க்கலாம்.

-   அலெக்ஸ்பரந்தாமன்,
       புதுக்குடியிருப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்