என் கவிதையில் படிந்த கவிஞர்



நான் முதலில் படித்த நவீன கவிஞர் -

#
பத்து ஆண்டுகளை நெருங்கும் எனது எழுத்துப்பயணத்தில் இன்று வரை 300ற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளேன். அந்த கவிதைகளில் ஈழத்திலும் வெளியிலுமாக பலரின் சாயல் தெரிவதாக நண்பர்கள், வாசகர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்; விவாதித்திருக்கிறேன்.

(அது உண்மை தான். ஏனெனில் நான் எனக்கென எவ்வித கவிதைப்பாணியையும் இதுவரை உருவாக்கவில்லையே)

ஆனாலும் நான் ஒருதடவை ஆச்சரியப்பட்டதும்; விவாதிக்காமலும் அமைதியாக இருந்த எனது கவிதையின் சாயலை ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்.
அது எனது சிறந்த கவிதைகளில் ஒன்று என்றால் மிகையல்ல. முகநூலில் பலராலும் சிலாகிக்கப்பட்ட கவிதையும் அது.

#உனக்கு_நினைவில்_வருகிறதா_அந்தக்கல்லூரிச்சாலை? என்னும் கவிதை

இந்தக்கவிதையை ஈழத்தின் முன்னணி நவீன கவிஞர் ஒருவரின் கவிதையின் சாயல் இருப்பதாக நண்பன் #ஆதித்தன் ஒருமுறை சுட்டிக்காட்டி, அந்தக்கவிதையையும் சொன்னார்.
எனக்கு ஆச்சரியமும், சங்கடமுமாகி விட்டது. அடடா.. இப்படி எழுதியுள்ளேனே; கொப்பி அடித்துவிட்டது பழி போடப்போகிறார்களே என்று.

ஆனாலும் அப்படியே விட்டுவிட்டேன். நண்பரைத்தவிர வேறு யாரும் அதனை சுட்டவில்லை. காரணம் அந்தக்கவிதையை படிக்காமல் விட்டிருக்கலாம். அல்லது என் கவிதையை படிக்காமல் விட்டிருக்கலாம்.

அதன் பிறகு தான் சிந்தித்துப்பார்த்தேன். பலரின் சாயலோடு இவரின் சாயலிலும் ஒரு கவிதை இருந்து விட்டுப்போகட்டுமே என்று விட்டுவிட்டேன். அவர் வேறு யாருமல்ல
ஈழத்தின் சிறந்த நவீன கவிஞர் சேரன் தான்.
இன்றவருக்கு பிறந்த நாள்.

இதோ அவரின் கவிதையும்; எனது கவிதையும்

உனக்கு நினைவில் வருகிறதா
அந்த கல்லூரிச்சாலை?
**************************************************
சகீ..!

உனக்கு நினைவிலிருக்கிறதா
நம் சந்திப்புக்காய்
காத்துக்கொண்டிருந்த
அந்த கல்லூரிச்சாலை..?

அதிகாலைப்பனியில்
சிலிர்த்துப்போய்
நடுங்கிகொண்டிருந்த
அதே கல்லூரிச்சாலை..!

உன் கொள்ளை சிரிப்பில்
வெள்ளை சீருடை
தோற்றுப்போனதை கண்டு
உள்ளுக்குள் சிரித்த என்னை
கண்ணால் தள்ளி விட்டுப்போன
அந்த நாள்
நினைவில் வருகிறதா உனக்கு?

யாரும்
கண்டுவிடக்கூடாதென்று நீயும்
யாரும்
வந்துவிடக்கூடாதென்று நானும்
கடவுளை வேண்டிகொண்ட
அந்த காலைப்பொழுது
உனக்கு நினைவில் வருகிறதா??

உன் கையை
இறுகப்பற்றியபடி
இலேசாய் தோள் சாய்ந்து
கவிதைகள் சொல்லி
உன்னை கோபப்படுத்திய
அந்த பேரூந்து பயணம்
உன் நினைவில் வருகிறதா??

இடைவழியில்
என் இருக்கை வாங்கி
நமக்குள் இடைவெளி தந்த
அந்த மூதாட்டியை
உனக்கு நினைவிருக்கிறதா??

எனக்குத்தெரியாதென்று நீயும்
உனக்குத்தெரியாதென்று நானும்
பின்தொடர்ந்துகொண்டிருக்கிறோம்

அதே அதியுன்னத காதலுடன்
உன் வாசல்
கடக்கும்போதெல்லாம்
அந்தச்சாலை என்னை
கொலை செய்யும் கோபத்தோடு
முறைக்கிறது...

உனக்கு
நினைவில் வருகிறதா
அந்த கல்லுரிச்சாலை..??

-எஸ்.சிவசேகரன்-


####



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்