என்ர கத - 19


#என்ர_கத - 19

எஸ்.சிவசேகரன்
****************

#பயத்தால்_வந்த_வாசிப்பு

நான் ஆறாந்தரத்துக்கு போனபிறகுதான் தெரிஞ்சுது வந்து மாட்டிட்டம் எண்டு. அந்தக்காலத்தில வாத்திமார் அடிக்கிற அடிபோல எங்கயும் அடிக்க மாட்டினம். கை கால் முதுகு எண்டு மாறி மாறி விழும். இப்ப அடிச்சா குற்றம். அதுதான் வாளேந்திய சிங்கங்களிருந்த நாட்டில இப்ப வாளேந்திய புலிகள் உலாத்துது.. சரி அத விடுவம்.

விசயம் என்னெண்டா, என்ர ரெண்டாவது கண்ண, அதாவது பல்துறை வாசிப்புக்கண்ண திறந்த சிற்பியிட்ட ஒவ்வொரு நாளும் நானும் பவி(எ) உத்தரனும், தனா(எ) தனராச்சும் அடிவாங்காத நாளில்ல. இதனைக்கும் அவர்தான் எங்கட வகுப்பாசிரியர். அவற்ற பாடந்தான் முதல் பாடம். என்ன பாடம் தெரியுமோ சமயம். பிறகென்ன சொல்லவோ வேணும். முதலாவது வகுப்பிலயே அடிதான் தேவாரம் கேட்டு.

அந்த இரண்டாம் சிற்பி வேற ஆருமில்ல
எங்கட பள்ளிக்கூடத்துக்கு அதிபராயும், பொடியளுக்கெல்லாம் வில்லனாவும் இருந்த தனிக்காட்டுராஜா #ம_கணபதிப்பிள்ளை சேர் தான். அடிக்கப்பிடிச்சா அப்பிடி சாத்து விழும்.

ஒருநாள் வகுப்பில திடீரெண்டு எழுப்பி
"உம்மட பேருக்கு என்ன அர்த்தம் தெரியுமோ? சொல்லும் பாப்பம்" எண்டார்.
எனக்கு கைகால் பதற வெளிக்கிட்டுது. கைபிடிக்க வளச்சுக்கட்டின பிரம்போட கையபின்னுக்கு கட்டிக்கொண்டு ஆள் வகுப்ப சுத்துறத பாக்கனுமே. அப்படியே சுத்தி முதுகிலதான் விழும். அண்டைக்கும் அப்பிடிதான் சுத்தினார். எனக்கு இண்டைக்கு சாத்துத்தான் எண்டு விளங்கிட்டுது. "தெரியாது சேர்" எண்டன்.

கிட்ட வந்து காதப்பிடிச்சு முறுக்கிக்கொண்டு சொன்னார் "சிவசேகரன் எண்டால் சிவபெருமான்ர பக்தன்; சிவத்தை நினைத்துக்கொண்டிருப்பவன்; சரியோ?
மறக்கச்கூடா" எண்டார்..
அது மட்டுமில்ல ஒவ்வொரு வகுப்பிலயும் புதுப்புது கேள்வியள கேட்டு அடிவிழும். சமயம் விஞ்ஞானம் அரசியல் இலக்கியம் எண்டு எல்லாம் கதைப்பர்.

ஒபிசில வேல முடிஞ்சா, பிரம்போட, பின்னுக்கு கைய கட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்த டவுண்டடிப்பர். எந்த வகுப்பு பிறியா இருக்கோ; அந்த வகுப்பின்ர கத சரி.
அதனால அவருக்கு பயந்தே, பிறி பாட நேரம் நூலகத்துக்கு போய்டுவம். அப்பிடிதன் நான் முதல்முதல் "மாயாவி" படக்கத வாசிச்சன். அதுக்குப்பிறகு #சோதி எழுதின நரிக்கதயள்; முல்லா கதயள் எண்டு வாசிப்பு போச்சுது. இந்தக்காலத்தில எங்கட பள்ளிக்கூடத்திலயே ஒரு பிரபல கவிஞர் இருந்தவர் எண்டு ரெண்டு வருசத்துக்கு முதல்தான் தெரியும்..

அவர் ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்..

00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்