என்ர கத - 15
என்ர கத - 15
#
எஸ்.சிவசேகரன்
#
பருத்தி ஊர்வலம் - தும்பளை சிவப்பிரகாச பாடசாலை
#
குடத்தனை- சின்னான் அண்ணயின்ர வீட்ட இருந்தும் வெளிக்கிட்டம். எங்கெயெண்டு தெரியாது எனக்கு. சாமான் சக்கட்டுகள் காவிக்கொண்டு நடக்கிறோம் மீண்டும். இப்போது எங்களோட ஒராள் கூட. அது நாங்கள் குடத்தனை வந்தபிறகு, நான் ஆசப்பட்டு பிடிச்ச கறுப்பு-வெள்ளை புள்ளி போட்ட நாய்க்குட்டி. வழக்கம்போல நான் அய்யான்ர சைக்கிள்ளில முன்னுக்கு.. குடத்தனை சந்திக்கு வந்து சேர்ந்தம். கனநெரமா இருந்தம் போறதுக்கு வழி இல்ல. அப்பதான் "புத்தா" என்பவர்ட வான் வந்தது. முதல்முதல்ல தட்டிவானில ஏறினன். ஆனாலும் எனக்கு சந்தோசமில்ல. ஏனெண்டா நான் ஆசையா பிடிச்சுவந்த நாய்க்குட்டிய, சந்தியில சலூன் கடை வச்சிருந்த (பேர் நினைவில்ல) அண்ணைக்கு கயித்தோட அய்யா குடுத்துட்டார். அழதுகொண்டே வந்தன். இறங்குமட்டும் அழுதுகொண்டே இருந்தனானாம்; அம்மாதான் சொன்னவா.
அப்பிடியே வந்து சேர்ந்த இடம் பருத்துறை-தும்பளை- லூர்த்து மாதா கோவிலுக்கு கிட்டவுள்ள ஒரு வெட்டயில. பிறகுதான் தெரியும் அது "முனை" எண்டு. அங்க குடுத்த தறப்பாள் கொட்டிலில 3-6 மாசம் இருந்திருப்பம். என் எட்டுவயது முடியமுதல் மூண்டாவது பள்ளிகூடம் சேர்ந்தன். அது #தும்பளை_சிவப்பிரகாச மகாவித்தியாலயம். அங்க இருந்துதான் என்ர அடுத்த கட்ட நகர்வு தொடங்கியிருக்குமெண்டு நினைக்கிறன். 2000 ஆண்டு இடையில இருந்து (மாதம் நினைவில்ல) 2004ம் ஆண்டு மட்டும் சிவப்பிரகாசத்திலதான் படிப்பு.
அங்க எனக்கு படிப்பிச்ச சேர், டீச்சர் எல்லாம் இப்பவும் என் நினைவு. பருத்துறையில கண்டா போய் கதைப்பன். மீனா ரீச்சர் (இங்கிலிஸ்),லலிதா ரீச்சர், சுதாகரன் சேர் (விஞ்ஞானம்), நவநீதன் சேர் (கணிதம்) இவயள் சந்திப்பன்.
ஆனாலும்,
என்ர சின்ன வயசு வளர்ச்சியிலயும், சிந்தனையிலயும் மாற்றத்தை கொண்டுவந்தவயளா நான் நினைக்கிறது ரெண்டு சேர்மார.. அவயள் ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்..
00

கருத்துகள்
கருத்துரையிடுக