கவிதை- ஊரை எழுப்பும் நாய்களின் ஊளை-எஸ்.சிவசேகரன்
ஊரை எழுப்பும் நாய்களின் ஊளை
##
நேற்று ஒரே கனவு
வீட்டில் எல்லோரும் கண்டோம்
எங்கள் வீட்டைச்சுற்றி
நரிகள் ஊளையிடத்தொடங்கின
அதிசயித்தோம்..
எங்கள் காட்டில் ஏது நரி?
சந்தேகித்தோம்..
வானத்தை நோக்கியல்லவா
நரிகள் ஊளையிடும்?
இவை ஏன் எங்கள்
வீடுகளைப்பார்த்து ஊளையிடுகின்றன..
அச்சமுற்றோம்..
நரிகள் எப்போது
கல்லெறியக் கற்றுக்கொண்டன?
ஜன்னலருகில் கூர்ந்து கேட்டோம்..
சில நரிகள் வசைபாடவும் கற்றிருந்தன..
பய்ய நடந்து வேலிக்கு வந்தோம்..
எங்கள்மேல் தெறித்தது வெள்ளொளி
ஓட்டைத் துளைத்தது ஒரு கல்
முற்றத்தில் விழுந்தது சிதறியது
ஒரு பியர்போத்தல்
கண்விழித்தோம்..
எங்கள் வீட்டுநாய்
ஊளையிட்டுக்கொண்டிருந்தது
வானத்தை நோக்கி..
00
06.20pm
16.05.2020

கருத்துகள்
கருத்துரையிடுக