என்ர கத -16


என்ர கத - 16
#
எஸ்.சிவசேகரன்
*****************
#இலட்சுமணன்_தோட்டம்

சிலகாலம் நல்லபடியாக இருந்தோம்.
பள்ளிக்கூடம் முடித்துவந்தால் நான் சின்னக்கா, இன்னும் சிலபேர் மாதாகோவிலடியிலதான் விளையாட்டு. இங்க ஒரு அதிசயம் இருந்திச்சு. இப்பவும் இருக்கோ தெரியயில்ல. எங்கட முகாமில இருந்து கிழக்குப்பக்கமெண்டு நினைக்கிறன். அங்கதான் அது இருந்த. அதென்னண்டா ஒரு "கிணறு". கிணறு அதிசயமோ எண்டு யோசிக்காதயுங்கோ. அது சாதாரண கிணறில்ல #பூதக்கிணறு.

அந்தக்காலத்தில பூதங்கிண்டின கிணறெண்டுதான் அக்கம்பக்கத்தாக்கள் சொல்லிச்சினம். அதுக்குள்ள விழுகிற வாளி, கஞ்சல், தடி, தண்டு எதுவும் அதுக்குள்ள இல்ல. எல்லாம் குகைபோல இருக்கிற பாறைக்குள்ள போய்டும். எத்தனை நாள் தடியள், குழையள் எறிஞ்சு மெய்ப்புபாத்தம். இப்படி நல்லாப்போன வாழ்க்கையில இன்னொரு திருப்பம். வேற என்ன லூர்த்துமாதா கோவிலடியிலிருந்து மீண்டும் இடம்பெயர்ந்தோம்.

அந்த இடத்துக்கு பேர்தான் #இலட்சுமணன்_தோட்டம். சுற்றிவர செக்கச்சிவந்த செம்மண் வெட்டை நிலமது. போன எல்லாருக்கும் கொட்டில் போட, கனக்க மட்டை (நினைவில்ல) தென்னோலையும் மரந்தடியளும் தந்திச்சினம். பிறகென்ன, இரவிரவா கொட்டில் போட்டு ஓலையால மேய்ஞ்சு குடியேறினம். அதுகும் நிலைக்கயில்ல. கொஞ்ச நாளில  குப்பை எரிக்கேக்க நெருப்பு பட்டு தொடுவையில இருந்த கொட்டில் எல்லாம் எரிஞ்சு சாம்பலாப்போச்சுது. அம்மான்ர அய்யான்ர ஐசி, குடும்ப காட்டுகள், உடுப்புகள், புத்தகங்கள், அரிசி சாமான் எல்லாம்.

சனமெல்லாம் குளறி அழுத சத்தம் இப்பவும் நினைவு. அந்த இடமே அல்லோலகல்லப்பட்டுது. அண்டைக்கு இரவு கன பெரிய ஆக்கள் பாண், பனிஸ், சோறு எல்லாம் தந்தவயள். விதானையாக்கள் வந்து பாத்திச்சினம். பிறகென்ன, அந்த இடத்துக்கு பக்கத்திலயே அடுத்த நாள் கொட்டில் போட ஓலை வந்து இறங்கிச்சுது.

ஆனாலும் நான் பள்ளிக்கூடம் போகயில்ல. உடுப்புகள் எரிஞ்சு போச்சே. அந்த நேரத்தில எனக்கு உடுப்புத்தந்தது ஒரு தோழன்ர அம்மா...

அந்த அம்மா ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்...

00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்