என்ர கத - 13
என்ர கத - 13
#
எஸ்.சிவசேகரன்
#
அம்பனில் அடைக்கலம்
#
"நடேசற்ற தோட்டத்தில சண்ட நடக்குதாம்"
"இயக்கம் அடிக்கிற செல்தான் உது"
"எப்பிடியும் இயக்கம் அடிச்சு கலச்சிடும் ஆமிய "
இதெல்லாம்
நாகையாக்கோயிலை தாண்டி வரும்போது எங்களோட வந்த சனம் சொல்லிக் கொண்டே வந்ததில நினைவிருக்கிற சில வார்த்தைகள். இன்னும் சிலபேர் புதுபுது கதயள் சொன்னவையள். நினச்சு நினச்சு பாக்கிறன் நினைவுவருகுதில்ல. (இது நடந்தது எனக்கு எட்டு வயதில) புலவலோடை பிள்ளயார் கோவிலத்தாண்ட அய்யா என்னை சைக்கிளில முன்னுக்கு ஏத்திட்டார். கொஞ்ச நேரத்தில அம்பன் ஆஸ்பத்திரியில வந்திறங்கினம். நானும் பிறந்த ஆஸ்பத்திரி இதுதான். வயலுகளும் பெயர்தெரியாத பென்னாம்பெரிய மரங்களும் நிறஞ்ச ஒரு ஆஸ்பத்திரி அது. நடந்து களச்ச சனமெல்லாம் " நாகையா காப்பாத்திட்டார் " எண்டு சொல்லி ஆஸ்பத்திரியில அங்கங்க குந்திச்சுது. ஊரில இருந்து காலம (நேரம் நினைவில்ல) வெளிக்கிட்டிருப்பம். அம்பனுக்கு வர மத்தியானமாப்போச்சுது. நாங்கள் வந்தத கேள்விப்பட்ட "தரவை" சனமெல்லாம் எங்கள பாக்க வந்துதுகள். பாண்,பனிஸ்,விசுக்கோத்து, தண்ணி, மரவள்ளிக் கிழங்கு எண்டு எல்லாம் தந்துதுகள். பிறகென்ன பெரியாக்கள் எல்லாம் சேர்ந்து மத்தியானத்துக்கு கிழங்கு அவிச்சினம். கிழங்கும் சம்பலுந்தான் அண்டைக்கு மத்தியான சாப்பாடு.
பிறகு சொல்லிச்சினம், "சண்ட கூடிப்போச்சாம்; இயக்கம் அடிக்கப்போகுதாம் தரவை ஆக்களயும் வெளிக்கிட வேண்டித்தான் வரும்"எண்டு. பிறகென்ன
ஆஸ்பத்திரியில (தரவை) இருந்து சாமானுகளோட வெளிக்கிட்டம்.
அப்பிடியே அம்பணுக்குள்ள வந்து நகுலண்ண வீட்டுக்கு பக்கத்துவீட்டில இருந்தம்.. எத்தனை நாள் இருந்தமெண்டு தெரியல; அங்கயிருந்தும் வெளிக்கிட்டம்..
அடுத்து எந்த ஊர் போனமெண்டு நாளைக்கு சொல்லுறன்..
00

கருத்துகள்
கருத்துரையிடுக