இயேசு அறையப்படாத சிலுவைகள் - எஸ்.சிவசேகரன்



இயேசு அறையப்படாத சிலுவைகள்
##

இயேசுவுக்காய் செய்யப்பட்டு
நிராகரிக்கப்பட்ட சிலுவைகளை
எங்கள் முதுகுகளில் சுமந்தபடியே
பயணப்பட்டோம் கடலை நோக்கி..

கடல் தாயிடம் முட்டுக்காலிட்டு
பாவமன்னிப்புக்கேட்ட எங்கள்
பிடரிவழியும் முதுகுவழியும்
ஆணிகள் ஏற்றப்பட்டு
கிடத்தப்பட்டோம் சிலுவைகளில்
முதுகுப்புறமாக..

இயேசுவுக்காய்
செய்யப்பட்ட சிலுவைகள் மீது
நாங்கள் அறையப்பட்ட
மூன்றாம் நாளில் வந்து
எங்கள்
சாபவிமோசனம் வேண்டி
கருணை பற்றிய பிரசங்கத்தை
சித்தார்த்தன் நடாத்திவிட்டுபோனாதாய்
சொல்லி பெருமைப்பட்டோம்
எங்களுக்கு முன்
மின்கம்பங்களிலும் மரங்களிலும்
அறையப்பட்டவர்களுக்கும்
வீதிகளிலும் கிணறுகளிலும்
தொலைந்தவர்களுக்கும்

00

எஸ்.சிவசேகரன்
-2012-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்