என்ர கத -18


என்ர_கத - 18
#
எஸ்.சிவசேகரன்
#

#கண்_திறந்த_சிற்பிகள்
************************

இந்த சிற்பிகள் ரெண்டு பேரயும் பற்றி நான் சொல்லாமல் விட்டால் என்ர கதயில உள்ள பெரிய குறையா அது இருக்கும்.
நான் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில பெற்ற புள்ளி வெறும் 75 தான். ஆனால் எனக்கு படிப்பிச்ச வாத்தியார் பெரிய ஆள். (ஆனாலும் ஆறாம் ஆண்டு தொடங்கி ஏ.எல் வரைக்கும் இந்த சிவசேகரன் தான் ஒராம் பிள்ள. இல்லாட்டி ரெண்டாம் பிள்ள எண்டுறது மாறின பள்ளிக்கூடமெல்லாம் தெரிஞ்ச கத)

அவற்ற பேர் #கனகலிங்கம். இவர் வேற ஆருமில்ல கரவெட்டி விக்கினேஸ்வராவில அதிபரா இருந்து இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்தான். இவர்தான் என்ர் #முதல்_கண்ணை திறந்த சிற்பி.
இவரிட்ட இருந்துதான் நான் நல்லா எழுதவும் பிழயில்லாம வாசிக்கவும் கற்றுக்கொண்டன். ஐந்தாமாண்டு வரும்போது நான் "மெல்லக்கற்றல்" நிலைவெண்டிய மாணவனாகவே இருந்தேன். மெல்லக்கற்றல் என்பது எழுத வாசிக்க முழுதாய் தெரியாத மாணவர்களுக்கான (அன்றைய கால) விசேட வகுப்பு.

அந்த நிலையிலிருந்த என்ர கையெழுத்த மாத்தினதோட என்ர தலயெழுத்தயே மாத்தி, இப்ப என்னென்னவோ எழுதவும் வாசிக்கவும் செய்தவர் இந்த கனகலிங்கம் சேர் தான்.
இப்பிடியான வாத்தியாரிட்ட படிச்சு, என்ர கையெழுத்த வளத்துக்கொண்டு ஆறாம் ஆண்டுக்கு போனன். இப்ப நான் மெல்லக்கற்றல் மாணவனா போகயில்ல, ஆறாம் ஆண்டு "A" வகுப்பு மாணவனா போனன். வெறும் ஒரு வருசத்தில, என்னை "A" தரத்துக்கு ஏத்தி விட்ட வாத்தியாரை எப்பிடி மறக்கேலும் சொல்லுங்க.
அங்கதான் என் அடுத்த கண்ணை - அதாவது அடுத்த வாசிப்பு கண்) திறந்த சிற்பிய பாத்தன்..

அவர் ஆரெண்டு நாளைக்கு சொல்லுறன்..

0

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்