என்ர கத - 11
என்ர கத - 11
#
எஸ்.சிவசேகரன்
#
வளர்ப்புத்தாய்மார்
#
நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிற
என்ர கதயில, முக்கியமா நான் ரெண்டு விசயத்ததான் உங்களுக்கு முன்னிலைப்படுத்துறன்.
ஒண்டு, ஒரு சாதாரண- ஆள் எழுத்தனாக முதலும் இப்பவும் நடந்த - நடந்துகொண்டிருக்கிற பாதை
ரெண்டு, வந்த பாதையில கண்ட மனிதர்களில என்னை பாதித்தவர்கள்- அல்லது வரலாற்றில் பதிய வேண்டியவர்கள் எண்டு நான் எண்ணியவர்கள்
கதயளோ, கவிதயளோ, நாவல்களோ எப்பவும் மற்றவர்களுக்கு ஒரு விடயத்தை - தத்துவத்தை - பாடத்தை சொல்லிவிட வேண்டும். இதுதான் இலக்கியத்தின்ர தலையாய பணியெண்டு நான் நினைக்கிறன்.
அந்த எண்ணத்திலதான், என்ர கதயில எதையும் மறைக்காம - புகழ்ச்சிகளை விடவும் இகழ்ச்சிகளையும் - இப்ப இழிவாப்போன விடயங்களையும் அப்பிடியே உங்களுக்கு சொல்லுறன். இதில் இருந்து நீங்கள் ஒரு பாடத்தையாவது கற்றுக்கொள்ளுவியள் எண்டும் நம்புறன்.
சரி விசயத்துக்கு வாறன், நான் சொன்ன வளர்ப்புத்தாய்மாரில முதலிரண்டு பேரும்
என்ர அக்காமார் அம்பிகையும் மாரியம்மாவுந்தான். நான் நேற்று சொன்னனெல்லோ அம்மா யாவாரம் செய்தவா எண்டு, அப்பிடி யாவாரத்துக்கு போகேக்க அம்மா எல்லாருக்கும் சமச்சும் வச்சிட்டுத்தான் போக வேணும். இல்லாட்டி அடிதான். அப்பிடியே யாவாரத்துக் போனலும் நேரம் போய்டும் சந்தைக்கு போக அதனால எத்தனையோ நாள் அம்மாவால மீன விக்க முடியேல்ல. அதுக்கும் அய்யா அடிப்பாராம்.
இப்பிடியான காலத்தில மூத்தக்கா 10ம் ஆண்டு படிச்சுக்கொண்டிருக்க இடையில நிப்பாட்டிப்போட்டார் அய்யா.
"வீட்ட நிண்டு சமை" எண்டு..
அக்காவும் படிப்பவிட்டு சமக்க தொடங்கிட்டாள். அப்பிடியே சின்னக்காவுக்கும் எனக்கும் குளிக்க வாக்கிறது; எனக்கு சாப்பாடு தீத்திறது; பள்ளிக்கூடம் கூட்டிப்போறது எண்டு எனக்கு இன்னொரு அம்மாவா மாறிட்டா.
ஆனாலும் நான் அக்காவுக்கு அடிப்பனாம்- தூசனத்தால ஏசுவனாம் எண்டு சின்னக்கா சொல்லுவாள். இருந்தாலும் அய்யா எனக்கு அடிக்கிறது குறைவாம்.
ஏனெண்டால் நான் உடன அழுதுடுவனாம்.
இப்பிடியான காலத்தில தான் நான் ஒரு பெரிய சண்டய பாத்தன் - பயந்தன்
அத நாளைக்கு சொல்லுறன்..
அட மூண்டாவது அம்மா ஆரெண்டு சொல்லயில்ல எண்டுதான யோசிக்கிறியள்.. அதுக்கு நீங்கள் இன்னும் கொஞ்ச "என்ர கத" படிக்க்கோணும்...
00
20.04.2020

கருத்துகள்
கருத்துரையிடுக