சிவசேகரன் - கவிதை

 


//

எல்லோருக்கும் தெரிந்த தச்சன்

இறந்து கிடக்கிறான்

அவன் பட்டறைக்குள்..


யாருக்காகவோ

அவன் செய்த வாங்கிலில்

அவனே உறங்கும் போது

எத்தனை அழகு


அவன் தலைமாட்டில் இருக்கும்

ஓய்வில் எப்போதும்

அவன் அமர்ந்து குழந்தையாகும்

நடைவண்டியில்

ஓடி ஏறுகிறது மனம்


நெற்றிப் பொட்டுக்கு நேராக

அவன் 

தூக்கில் தொங்கி கொண்டிருக்கையில்

நானும் அவர்களும்

அவன் செய்து கொடுத்த கட்டிலில்

இனி எப்படி நிம்மதியாய்

உறங்குவது


00


01.12.2021

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்